Last Updated:

பிப்ரவரி 2023இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் இன் சக்சஸை தொடர்ந்து பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை மற்றும் அனைத்து அம்சங்களையும் பற்றி விரிவாக பார்ப்போம்.

News18

ஒன்பிளஸ் தனது புதிய இயர்பட்ஸான பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 12.4 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பாஸ்வேவ் 2.0 தொழில்நுட்பத்தை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்களில் AI ஆதரவு மற்றும் ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சமும் உள்ளது. இவற்றில், 43 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

இவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP55 தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. பிப்ரவரி 2023இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் இன் சக்சஸை தொடர்ந்து பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்ஸை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை மற்றும் அனைத்து அம்சங்களையும் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் 2: விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்

ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் 2 சீனாவில் CNY 179 (தோராயமாக ரூ. 2,100) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​அவை சிறப்பு தள்ளுபடி விலையில் CNY 169 (தோராயமாக ரூ. 2,000) க்கு வாங்கலாம். இந்த பட்ஸ்கள் மற்ற இ-காமர்ஸ் தளங்களுடன் ஒப்போ சைனா இ-ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் TWSஆனது பிளாஷ் ப்ளூ மற்றும் சப்மரின் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் 2: விவரக் குறிப்புகள்

ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் 2ஆனது 12.4mm டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. இவை எடையில் மிகவும் குறைவு மற்றும் ஒவ்வொரு இயர்பட் எடையும் 4.2 கிராம் மட்டுமே. தேய்மானம் மற்றும் கீறல் எதிர்ப்பும் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கேமிங் மற்றும் திரைப்படங்களின்போது சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்கும் 3D சிறப்பு ஆடியோ அமைப்பும் ஆதரிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரூ.601க்கான ஜியோவின் ஓராண்டிற்கான அன்லிமிடெட் 5ஜி டேட்டா ப்ளான்: முழு விவரம் இதோ…!

இந்த இயர்பட்களில் AI ஆதரவுடன் டூயல் மைக்ரோஃபோன் யூனிட்கள் உள்ளன. ஒன்பிளஸ் இன் சமீபத்திய TWS இயர்பட்கள் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்தையும் கொண்டுள்ளது. இது தவிர, மற்றும் BassWave 2.0 தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இது யூசர்களுக்கு சிறந்த பேஸை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அவை AAC மற்றும் SBC ஆடியோ கோடெக்குகள் மற்றும் டூயல் டிவைஸ் கனெக்ட்டிவிட்டி உடன் புளூடூத் 5.4 ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன மற்றும் 47ms வரை லோ லேடன்சியை ஆதரிக்கின்றன.

ஒன்பிளஸ் ஒவ்வொரு பட்ஸ்களிலும் 58mAh பேட்டரியை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சார்ஜிங் கேஸில் 440mAh பேட்டரி உள்ளது. இந்த பட்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்றும், கேஸ் 43 மணி நேரம் வரை பிளேபேக்கை வழங்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேக்னெட்டிக் சார்ஜிங் கேஸ் ஆனது USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது.

இதையும் படிக்க: Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்…

ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ் 2 இயர்பட்கள் ஆனது 29.99 x 20.30 x 23.87 மிமீ மற்றும் 4.2 கிராம் எடையுடையது. அதே நேரத்தில், சார்ஜிங் கேஸ் ஆனது 66.50 x 51.24 x 24.83 மிமீ மற்றும் ஹெட்செட்டுடன் அதன் எடை 46.2 கிராம் ஆகும்.



Source link