ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான கால அவசாகத்தை ஜூன் 14, 2025 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களில் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டே ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய வேண்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய இடத்திற்கு குடி பெயர்ந்தவர்கள், பெயரில் மாற்றம் செய்தவர்கள் போன்ற பலரும் தங்களது ஆதார் அட்டையில் தகவல்களை சரியாக திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஆதார் அட்டையில் உள்ள நமது முகவரியை ஆன்லைன் மூலமாகவே இலவசமாக எவ்வாறு திருத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஆன்லைன் மூலமாக இலவசமாக ஆதார் அட்டையில் முகவரியை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:
1. உங்களது மொபைல் அல்லது கணினி பிரவுசரில் https://ssup.uidai.gov.in/ssup/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
2. உங்களது ஆதார் எண்ணை என்டர் செய்து மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP நம்பரை என்டர் செய்யவும்.
3. “Update Address in Aadhar” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. திருத்தம் செய்யவேண்டிய முகவரியை என்டர் செய்யவும்.
5. அதனை உறுதி செய்ய உதவும் தேவைப்படும் அடிப்படை ஆதார் ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்டேட் செய்யவும். வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
6. திருத்தம் செய்த முகவரியை சமர்பிப்பதற்கு முன் முழுவதுமாக ஒரு முறை சரிபார்க்கவும்.
7. உங்களது கோரிக்கை சமர்பிக்கபட்டதும் அதற்கான SRN எனப்படும் சர்வீஸ் ரிக்வஸ்ட் நம்பர் உங்களுக்கு அளிக்கப்படும். அதன் மூலம் உங்களது கோரிக்கை நிலையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஆஃப்லைன் மூலம் ஆதார் அட்டையில் முகவரியை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:-
ஆஃப்லைன் வழியாக ஆதார் அட்டையில் முகவரியை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக உங்களுக்கு அருகே உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி உங்களது கோரிக்கை விவரங்களை சமர்பிக்கலாம்.
உங்களுக்கு அருகே உள்ள அதிகாரப்பூர்வ ஆதார் சேவை மையத்தை தெரிந்து கொள்ள UIDAI வலைதளத்தை பார்வையிடவும். பிறகு ஆதார் சேவை மையத்தை அணுகி ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான படிவத்தை பெறவும்.
தேவையான ஆவணங்களுடன் உங்களது திருத்தம் செய்யப்படவேண்டிய முகவரியை படிவத்தில் பூர்த்தி செய்யவும். பையோமெட்ரிக் வெரிஃபிகேஷன் மூலம் உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
இதற்கு உங்களிடம் ரூ.50 சேவை கட்டணமாக பெறப்படும். உங்களது கோரிக்கை நிலையை அறிந்து கொள்வதற்கான URN நம்பர் உங்களுக்கு அளிக்கப்படும்.
வங்கி பாஸ்புக் அல்லது ஸ்டேட்மென்ட், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டண ரசீது, டெலிபோன் கட்டண ரசீது, ரேஷன் கார்டு, போன்றவற்றை நீங்கள் ஆதார ஆவணங்களாக சமர்பிக்கலாம்.
உங்களது கோரிக்கை நிலையை அறிந்து கொள்ள UIDAI வலைதளத்திற்கு சென்று STATUS PORTAL என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு அளிக்கப்பட்ட SRN/URN நம்பரை உள்ளீடு செய்யவும். அதில் உங்களது தற்போதைய கோரிக்கையின் நிலை பற்றி அறிந்து கொள்ளலாம். கோரிக்கை சமர்பித்த நாளிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உங்களது புதிய திருத்தம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வதற்குUIDAI வலைதளத்திற்கு சென்று “Download Aadhaar” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது ஆதார் எண் அல்லது என்ரோல்மென்ட் எண்ணை என்டர் செய்யவும்.
உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்படும் OTP என்னை என்டர் செய்ததும் உங்களது திருத்தம் செய்யப்பட்ட ஆதார் அட்டை PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்களது பெயரின் முதல் 4 எழுத்துக்களை கேபிடல் வடிவத்திலும் அதனை தொடர்ந்து உங்களது பிறந்த வருடத்தை பாஸ்வேர்டாக என்டர் செய்து உங்களது ஆதார் அட்டையினை நீங்கள் பார்க்க முடியும்.
December 26, 2024 7:50 PM IST