Last Updated:
இது 3GB மற்றும் 4GB ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத octa-core சிப்செட்டில் இயங்குகிறது.
ஐடெல் நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட் ஃபோனான Zeno 10-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 6.6-இன்ச் HD+ ஸ்கிரீனை கொண்டுள்ளது. மேலும் புதிய ஐடெல் ஜெனோ 10 மொபைலானது அதன் ஃப்ரன்ட் கேமரா கட்அவுட்டைச் சுற்றி நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கும் டைனமிக் பார் அம்சத்தை கொண்டுள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் Zeno 10 மொபைலின் விலை:
Zeno 10 மொபைலின் 3GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ. 5,999-ஆகவும் மற்றும் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ. 6,499-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமேசான் மூலம் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கிறது. இது ஃபான்டம் கிரிஸ்டல் (Phantom Crystal) மற்றும் ஓபல் பர்பிள் (Opal Purple) உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக சலுகையாக, அமேசான் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ. 500 உடனடி கேஷ்பேக்கை வழங்குகிறது.
Itel Zeno 10 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
டூயல் சிம் சப்போர்ட் கொண்ட இந்த ஐடெல் மொபைல் ஆண்ட்ராய்டு 14-ல் (Android 14 Go Edition) இயங்குகிறது மற்றும் 6.56-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவை 60Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கொண்டுள்ளது. சமீப காலங்களில் அறிமுகமாகி வரும் ஐடெல் ஸ்மார்ட் ஃ போன்களைப் போலவே, இதிலும் செல்ஃபி கேமரா கட்அவுட்டைச் சுற்றி பேட்டரி சார்ஜிங் விவரங்கள் மற்றும் இன்கமிங் கால் அலெர்ட்ஸ் போன்ற நோட்டிஃபிகேஷன்களை காட்டும் டைனமிக் பார் (Dynamic Bar) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 3GB மற்றும் 4GB ரேம் ஆப்ஷன்களுடன் குறிப்பிடப்படாத octa-core சிப்செட்டில் இயங்குகிறது. கூடுதல் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜுடன் இன்டர்னல் ரேம்-ஐ 8GB வரை விரிவாக்கலாம். இதில் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. Zeno 10 மொபைலின் பின்புறத்தில் 8MP பிரைமரி சென்சார் கொண்ட AI-சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டமை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 5MP கேமரா உள்ளது.
இந்த மொபைலில் சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது மற்றும் ஃபேஸ்லாக் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலில் இருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் வைஃபை, ப்ளூடூத் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும் இந்த மொபைல் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. இந்த மொபைலின் மொத்த எடை 186 கிராம் ஆகும். மேலும் இந்த மொபைலில் microSD கார்ட் ஸ்லாட் உள்ளது. நிறுவனம் இந்த மொபைலுடன் இலவச பேக் பேனலை வழங்குகிறது.
January 13, 2025 2:52 PM IST