ரியல்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் P1 Speed 5G என்ற ஸ்மார்ட் ஃபோனையும், Techlife Studio H1 என்ற வயர்லெஸ் ஹெட்ஃபோனையும் அறிமுகம் செய்துள்ளது.
கேமிங் ஆர்வலர்களை கவரும் வகையில் அறிமுகமாகியுள்ள ரியல்மியின் இந்த P சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன் MediaTek Dimensity 7300 எனர்ஜி 5G சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக 6,050mm ஸ்கொயர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துருப்பிடிக்காத VC கூலிங் சிஸ்டமை கொண்டுள்ளது.
அதேபோல், இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் ஹெட்ஃபோனான Techlife Studio H1 அறிமுகமாகி உள்ளது. இந்த ஹெட்ஃபோன், LDAC ஆடியோ கோடெக் சப்போர்ட் செய்கிறது. அதுமட்டிமின்றி ஹை-ரெஸ் சர்ட்டிஃபிகேஷனுடன் வருகின்றது.
விலை விவரங்கள்:
8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட P1 Speed 5G மொபைலின் விலை ரூ.17,999. அதேபோல், 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட P1 Speed 5G-ன் விலை ரூ. 20,999.
இந்த ஃபோனை வாங்கும்போது, ரூ.2,000-க்கு கொடுக்கப்படும் லிமிட்டட் கூப்பன் டிஸ்கவுன்ட்டை யன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட மாடல்கள் முறையே ரூ.15,999 மற்றும் ரூ.18,999- என ஆஃபரில் வாங்கலாம்.
இந்த P1 Speed 5G பிரஷ்டு ப்ளூ மற்றும் டெக்ஸ்சர்டு டைட்டானியம் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் இந்த போன்கள் கடந்த அக்டோபர் 20 முதல் Realme.com மற்றும் Flipkart ஆகிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி P1 Speed 5G மொபைலின் சிறப்பு அம்சங்கள்:
டூயல் நானோ சிம் ஆப்ஷன் கொண்ட Realme P1 Speed 5G மொபைல், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 இல் இயங்குகிறது. இது 6.67-இன்ச் ஃபுல் -HD+ டிஸ்ப்ளே, 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட், 92.65% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ மற்றும் 2,000nits பீக் பிரைட்னஸை கொண்டுள்ளது. இந்த மொபைலின் டிஸ்ப்ளே ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 12GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் octa-core 4nm MediaTek Dimensity 7300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :
ரூ.10,000-க்குள் அட்டகாசமான கேமிரா, ஹைடெக் லுக் உடன் 5G ஸ்மார்ட்போன்.. அசத்தும் சியோமி
டைனமிக் ரேம் வசதியுடன் கிடைக்கும் இந்த மொபைலின் மெமரியை 26ஜிபி வரை அதிகரித்து கொள்ளலாம். மேலும் 50MP AI பின்புற கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 16MP முன்பக்க கேமரா உள்ளது. இதிலிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS, Glonass, Beidou, Galileo, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மொபைல் 45W சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைல் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்-பிரிண்ட் சென்சார், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
Techlife Studio H1 ஹெட்ஃபோன்:
ரியல்மி நிறுவனத்தின் Techlife Studio H1 வயார்லெஸ் ஹெட்ஃபோன் ரூ.4,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தள்ளுபடி விலையில் ரூ.4,499-க்கு வாங்கலாம். இது கடந்த 21ம் தேதி முதல் Realme.com, Flipkart, Amazon, Myntra மற்றும் பிற முக்கிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடல் ஹெட்ஃபோன்கள் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.
ரியல்மி டெக்லைஃப் ஸ்டுடியோ எச்1 சிறப்பு அம்சங்கள்:
இந்த ஹெட்ஃபோன் 40mm டைனமிக் பாஸ் டிரைவர்ஸ் மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது. இந்த ஹெட்ஃபோன்ஸ் LDAC, AAC மற்றும் SBC ஆடியோ கோடெக்ஸ்களை சப்போர்ட் செய்வதோடு சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 43dB ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் வெளிப்புறத்தில் கேட்கும் இரைச்சலை கண்டறிந்து நடுநிலையாக்க இந்த அம்சம் ஃபீட்ஃபார்வர்டு மற்றும் ஃபீட்பேக் மைக்ரோஃபோன்ஸ் என இரண்டையும் பயன்படுத்துகிறது.
இதையும் படியுங்கள் :
வாட்ஸ்அப் வீடியோ காலின்போது உங்க முகத்தை செம அழகாக காட்டணுமா? – இதை செய்யுங்க போதும்!
இந்த ஃபோல்டபிள் ஹெட்ஃபோன்கள் வால்யூம் கன்ட்ரோல், ஆன்-ஆஃப் கன்ட்ரோல் மற்றும் ANC கன்ட்ரோல்-ஐ கொண்டுள்ளது. அவை 20Hz-40,000Hz ஃப்ரிக்வென்ஸி ரெஸ்பான்ஸ் ரேஞ்சை வழங்குகின்றன. Realme Techlife Studio H1 ஆனது Spatial ஆடியோ எஃபெக்ட் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் 600எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன, இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 மணிநேர பேட்டரி லைஃபை வழங்கும் என்று கூறப்படுகிறது.
.