Last Updated:

2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்துடைய பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படம் தோல்வியடைந்தது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக அந்த படத்துடைய இயக்குனர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

News18

சினிமா துறையில் நீண்ட அனுபவம் மிக்கவராக இருந்தாலும் எந்த படம் வசூலை அள்ளிக் குவிக்கும், எந்த படம் தோல்வியில் முடியும் என்பதை மிகத் துல்லியமாக கணித்து விட முடியாது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன.

மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்கள் பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்த சம்பவங்கள் கடந்து சில ஆண்டுகளில் நடந்துள்ளன. அந்த வகையில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஒன்று தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை பெற்று தந்தது.

அந்த படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தனர். நீங்கள் சினிமா ஆர்வலராக இருந்தால் அந்த படம் ஆதிபுரூஷ் என்று நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.

அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திய அந்த திரைப்படம் 2023 ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் உருவாக்கியிருந்தனர். இருப்பினும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் முதற்கொண்டு நெகட்டிவான விமர்சனங்களை அள்ளி குவித்தது.

ராமாயணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆதிபுரூஷ் திரைப்படம் 393 கோடி ரூபாய் அளவு வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்துடைய பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படம் தோல்வியடைந்தது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக அந்த படத்துடைய இயக்குனர் ஓம் ராவத் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதையும் படிங்க – Game Changer | அதே ஊழல் எதிர்ப்பு தான்..ஆனால்.. – கேம் சேஞ்சர் டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா?

தயாரிப்பாளர் தரப்புக்கு இதன் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் அளவு இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தன. ஆதிபுரூஷ் படத்தை பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்திருந்தனர். ஆதிபுரூஷ் படம் தோல்வியில் முடிந்தாலும் டி சீரிஸ் தயாரித்த அனிமல் என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுத் தந்து ஆதிபுரூஷ் தோல்வியை சரி செய்தது.



Source link