உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களுடன் கூடிய வரி பலன்களை தரும் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அவசரகால சூழ்நிலைகளுக்கு உதவுவதற்காக பெரிய அளவிலான தொகையை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரி பலன்களையும் பெற்று தருவதற்கும் உதவுகின்றன. அந்த வகையில் வரி பலன்களை தரும் ஒரு சில பொதுவான சிறுசேமிப்புத் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தபால் நிலைய சேமிப்புக் கணக்கு
இந்த கணக்கில் ஓராண்டுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது மற்றும் இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 500 ரூபாய்.
நேஷனல் சேவிங்ஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு
ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு 6.7 சதவீதம். இதில் ஒருவர் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் என்ற தொகையை முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு கிடையாது.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட்
1,000 ரூபாய் இருந்தால் இந்த கணக்கை ஒருவரால் திறக்க முடியும். இதற்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. 1 ஆண்டுக்கு இதற்கான வட்டி விகிதம் 6.9%ஆகவும், 2 ஆண்டுகளுக்கு 7 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 7.1%ஆகவும், 5 வருடங்களுக்கு 7.5%ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
நேஷனல் சேவிங்ஸ் மன்த்லி இன்கம் கணக்கு
இது ஓராண்டுக்கு 7.4% வட்டியை வழங்குகிறது. இதில் ஒருவர் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். மேலும் சிங்கிள் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாயையும், ஜாயின்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிபட்சமாக 15 லட்ச ரூபாயையும் முதலீடு செய்யலாம்.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் கணக்கு
இந்த திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும் தேதியில் இருந்து மார்ச் 31 / செப்டம்பர் 30 / டிசம்பர் 31 வரையிலான தேதி வரை 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி அன்று முறையே வழங்கப்படுகிறது. இதில் ஒருவர் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயையும், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்யலாம்.
இதையும் படிக்க: DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி முதல் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF)
PPF மூலமாக முதலீட்டாளர்களுக்கு ஓராண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டில் 500 ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி கணக்கு
இந்த திட்டம் ஓராண்டுக்கு 8.2% வட்டியை வழங்குகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டில் 250 ரூபாயாகவும், அதிகபட்ச முதலீடு 1.5 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
இதற்கான வட்டி விகிதம் ஒரு ஆண்டுக்கு 7.7 சதவீதம். குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
இதையும் படிக்க: இந்த சூட்சமம் தெரியுமா உங்களுக்கு? அதிக கேஷ்பேக் கிடைக்கும் 5 கிரெடிட் கார்டுகள்
கிசான் விகாஸ் பத்திரம்
இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயாகவும், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லாமலும் உள்ளது.
December 29, 2024 8:24 AM IST