Last Updated:

கடந்த 2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘7ஜி ரெயின்போ காலனி’.

News18

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டு, படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் 2-ம் பாகத்துக்கான பணிகளை சைலண்டாக மேற்கொண்டு வருகிறார் செல்வராகவன். ஆங்கிலப் புத்தாண்டு ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். அதில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து படக்குழு எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்டரைப் பொறுத்தவரை நட்சத்திரங்கள் ஒளிரும் பின்னிரவில் இருவர் நடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களைக் கவர்ந்துள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link