நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, தனது 8-ஆவது ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடுகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள தனது ப்ரீபெய்ட் யூஸர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களில் சில சிறப்பு சலுகைகளை ஜியோ வழங்கியுள்ளது மேலும் மற்றும் OTT சப்ஸ்கிரிப்ஷன்கள், சிறப்பு மெம்பர்ஷிப்கள் மற்றும் பலவற்றில் ரூ.700 வரை யூஸர்கள் பெனிஃபிட்ஸ்களை பெறலாம். ஜியோ தற்போது நாட்டில் 490 மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களை கொண்டுள்ளது. மலிவு விலையில் அதிவேக டேட்டா மற்றும் சர்விஸ்களை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது.
ஜியோ 8ஆம் ஆண்டு ஆஃபரில் யூஸர்களுக்கு என்ன கிடைக்கும்?
செப்டம்பர் 5 முதல் 10 வரையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ஜியோ யூஸர்கள் ரூ.700 மதிப்புள்ள மூன்று பெனிஃபிட்ஸ்ளை பெறுவார்கள். எல்லா ரீசார்ஜ்களுக்கும் இந்த ஆஃபர் இல்லை. காலாண்டு ரீசார்ஜ் பிளான்களான ரூ.899 மற்றும் ரூ.999 அல்லது ரூ.3,599 வருடாந்திர பிளானை இந்த காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த பெனிஃபிட்ஸ்கள் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.899 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் பிளான்கள் ஒரு நாளைக்கு 2GB டேட்டா லிமிட்டுடன் வருகின்றன. மேலும் இந்த பிளான்கள் முறையே 90 நாட்கள் மற்றும் 98 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டை கொண்டுள்ளன. அதே நேரம் ரூ.3599 ஏன விலையில் கிடைக்கும் ஜியோவின் வருடாந்திர பிளான் ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டா லிமிட் கொண்டது மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டை கொண்டிருக்கிறது.
இந்த பிளான்களில் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபரானது Zee5, SonyLiv, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNxt, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi மற்றும் JioTV உள்ளிட்ட OTT ஆப்ஸ்களுக்கான சப்கிரிப்ஷன் அடங்கும். மேற்கண்ட OTT ஆப்ஸ்களுக்கான 28 நாட்கள் அக்சஸ் வேலிடிட்டி மற்றும் 10GB டேட்டா வவுச்சர் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இதன் மதிப்பு ரூ.175 ஆகும். மேலும் ஜியோ நிறுவனம் மேற்கண்ட ரீசார்ஜ் பிளான்களுடன் மூன்று மாதங்களுக்கு Zomato Gold மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்குகிறது. தவிர Ajio வவுச்சரையும் நிறுவனம் வழங்குகிறது, இது யூஸர்கள் ரூ.2,999 மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் போது ரூ.500 தள்ளுபடி அளிக்கிறது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
ஜியோ யூஸர்கள் ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3599 பிளான்களை ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் ரூ.700 மதிப்புள்ள பலன்கள் சுருக்கமாக இங்கே…
– ரூ.175 மதிப்புள்ள 28 நாட்கள் செல்லுபடியாகும் OTT & டேட்டா பேக்
– மூன்று மாதங்களுக்கு இலவச Zomato Gold மெம்பர்ஷிப்
– ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் Ajio-வின் வவுச்சர் (ரூ. 2999 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆர்டர்களில் ஃபிளாட் ரூ.500 டிஸ்கவுன்ட்).
.