Last Updated:

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த சேவாக்கின் சாதனையை அவர் சமன் செய்தார்

News18

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்காக கருண் நாயர் விளையாடி வருகிறார். மிக சிறப்பாக விளையாடிய இவர் வெறும் 8 போட்டிகளில் 752 ரன்கள் குவித்தார். இவற்றில் 5 சதங்கள் அடங்கும். 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பின்னர் மோசமான ஆட்டம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடைசியாக அவர் 2017 மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் தொடரின் போது விளையாடினார். அப்போது அவர் இங்கிலாந்துக்கு எதிரான சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த சேவாக்கின் சாதனையை அவர் சமன் செய்தார்.

2004 இல் மூல்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக் 309 ரன்களும், 2008இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மேட்சில் 319 ரன்களும் சேவாக் எடுத்திருந்தார். இந்நிலையில் 33 வயதாகும் கருண் நாயர் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படிங்க – சமாஜ்வாதி பெண் எம்.பி.யுடன் ரிங்கு சிங் திருமணம்..? மௌனம் கலைத்த எம்.பி.யின் தந்தை

இருப்பினும் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சிறப்பாக விளையாடக்கூடிய எல்லோரையும் அணியில் சேர்ப்பது என்பது கஷ்டமான விஷயம். காயம் ஏதும் வீரர்களுக்கு ஏற்பட்டால் அப்போது கருண் நாயரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.



Source link