Last Updated:

இந்த புதிய மொபைலில் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 700nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

News18

லாவா நிறுவனம் இந்தியாவில் புதிதாக Yuva 2 என்ற 5G மொபைலை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பரில் நிறுவனம் Yuva 5G மொபைலை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில். தற்போது Yuva 2 என்ற 5G மொபைலை  அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மொபைல் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட பட்ஜெட் டிவைஸ் ஆகும். மேலும் இதில் நோட்டிஃபிகேஷன் லைட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இந்த பட்ஜெட் 5G டிவைஸ், தற்போது ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் லாவாவின் Yuva 2 5G மொபைலின் விலை

இந்தியாவில் லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Yuva 2 5G மொபைலானது, 4GB ரேம் மற்றும் 128GB சேமிப்பு என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் தற்போது நாடு முழுவதும் உள்ள ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறது. எனினும் இது ஆன்லைனில் கிடைக்குமா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது மார்பிள் பிளாக் மற்றும் மார்பிள் ஒயிட் என இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Yuva 2 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்

இந்த புதிய மொபைலில் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 700nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 4GB RAM உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் Unisoc T760 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் 4GB வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தை சப்போர்ட் செய்கிறது. ஆண்ட்ராய்டு 14-ல் இயங்கும் இந்த மொபைல் 128GB UFS 2.2 ஆன்போர்ட் ஸ்டோரேஜூடன் வருகிறது. Yuva 2 5G மொபைலில் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கிறது. இதில் AI-சப்போர்ட் கொண்ட 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP செகண்டரி சென்சார் அடங்கும்.

இந்த மொபைலின் முன் பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 8MP சென்சார் உள்ளது. நோட்டிஃபிகேஷன் லைட் யூனிட் கேமரா மாட்யூலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது பிளிங்க் ஆகும் லைட்ஸ்களை பயன்படுத்தி இன்கமிங் கால்ஸ் உட்பட இன்-சிஸ்டம் மற்றும் ஆப் நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மொபைல் 5,000mah பேட்டரியைக் கொண்டுள்ளது. இது USB டைப்-சி போர்ட் வழியாக 18W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த மொபைலில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டை கொண்டுள்ளது. இதில் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது மற்றும் இந்த டிவைஸ் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை கொண்டுள்ளது.



Source link