Last Updated:
Game Changer | ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.
ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் முதல் நாளில் ரூ.186 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. இரண்டாம் நாளில் படத்தின் வசூல் குறைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: Ajith | “No Guts.. No Glory” கேலி, கிண்டலுக்கு தரமான பதிலடி – கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித்!
மூன்றாவது நாளான நேற்று ஓரளவு வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடிக்கும் மேல் என எஸ்.ஜே.சூர்யாவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாக ஷங்கர் – கமல்ஹாசன் காம்போவில் வெளியான ‘இந்தியன் 2’ படம் மொத்தமாகவே ரூ.140 கோடி வசூலை ஈட்டியிருந்தது. இதன் மூலம் ‘இந்தியன் 2’ வசூலை ‘கேம் சேஞ்சர்’ முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
January 13, 2025 9:13 AM IST