நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி.
முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவின் வெளிப்பாடாக தன் பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார்.
இந்தப் பெயரையே அவர் தனது படங்களிலும் பொது வெளியிலும் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில், இனி தன்னை யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கலாம் எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அவர், பழையன கழிதலும் புதியன புகுதலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.