Last Updated:
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்துள்ளன. நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முதல் அணியாக முன்னேறியுள்ள நிலையில், இந்தியா தகுதி பெறவுள்ள வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் பெற்ற வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். அந்த வகையில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 9 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளை டிரா செய்து உள்ளது. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி 58.89 புள்ளிகளை பெற்றுள்ளது.
Also Read: WTC 2023 – 2025 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இனியும் இந்தியா தகுதிபெற வாய்ப்புள்ளதா?
இந்திய அணி 17 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளை டிரா செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.88 புள்ளியாக உள்ளது.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் உள்ளன, தற்போதைய சூழலில் தென் ஆப்பிரிக்க அணி பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணி மட்டுமே தென்னாப்பிரிக்க அணியுடன் மோதும் சூழல் காணப்படுகிறது.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்துள்ளன. நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு பின்வரும் வாய்ப்புகள் உள்ளன-
மீதமுள்ள இரண்டு போட்டிகளை டிரா செய்து 1-1 என்ற நிலையில் இந்த தொடர் முடிந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் இலங்கை வெற்றி பெற்றால் இந்திய அணி தகுதி பெறும்.
இதையும் படிங்க – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் நிறைவு செய்து, இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியா முன்னேறும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-2 என முடிந்தால், இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியாமல் போனாலும் இந்தியா தகுதி பெறும்.
December 29, 2024 9:18 PM IST