Last Updated:

Ajith | ‘Certified self made’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலின் வரிகளை ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி பாடியுள்ளார். எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து சாதித்த அஜித்தை பாராட்டும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளது.

News18

நடிகர் அஜித்தை பாராட்டும் வகையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடியுள்ள பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘கடைசி உலகப்போர்’ திரைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. பாடகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் தற்போது அஜித்தை புகழ்ந்து ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

‘Certified self made’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலின் வரிகளை ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி பாடியுள்ளார். எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து சாதித்த அஜித்தை பாராட்டும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளது.

உலக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் மற்றும் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுவதும் சுற்றிய ஆதி ஆகியோரை குறிக்கும் வகையில் சிலேடை வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அஜித்தே என்ற அந்த பாடல் வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



Source link