பலர் தங்களுடைய வீடு வாங்கும் கனவை ஹோம் லோன் மூலமாக பூர்த்தி செய்து கொள்வதால், ஹோம் லோன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான வார்த்தைகளை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது. அவற்றை இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

முதல் தொகை (Principal Amount)

முதல் தொகை என்பது வீட்டுக்காக கடன் வழங்குனர் உங்களுக்கு கடனாக கொடுத்த தொகை. இதில் வட்டி சேர்க்கப்படாது. உதாரணமாக, நீங்கள் 30 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ராப்பர்ட்டியை வாங்க திட்டமிட்டு இருந்தால், அதற்கு 10 லட்சம் ரூபாயை டவுன் பேமெண்டாக செலுத்தி, 20 லட்சம் ரூபாயை நீங்கள் கடன் வழங்குனரிடமிருந்து பெறும்போது, இந்த 20 லட்ச ரூபாய் என்பது முதல் கடன் தொகையாக அமைகிறது. இதுவே, உங்களுடைய மாத EMI மற்றும் கடனுக்கான கால அளவை தீர்மானம் செய்யும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம் என்பது கடன் வழங்குனர் உங்களுக்கு அளித்துள்ள சேவைகளுக்காக முதல் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வட்டியாக பெறும் அளவு. இதில் இரண்டு வகையான வட்டி விகிதங்கள் உள்ளன. ஒன்று நிலையானது, அது ‘ஃபிக்சட்’ என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று நிலையற்றது, அது ‘ஃபுளோட்டிங்’ எனப்படுகிறது. ஃபுளோட்டிங் விகிதத்தை பொறுத்தவரை சந்தை நிலவரங்கள் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ரெப்போ விகிதங்களின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும்

ஹவுசிங் லோன் EMI

மாத தவணை அல்லது EMI என்பது கடனை திருப்பிக் கொடுப்பதற்கு ஒவ்வொரு மாதமும் கடன் வழங்குனருக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை. இதில் முதல் தொகை மற்றும் வட்டியாகிய இரண்டும் அடங்கும்.

லோன் கால அளவு

லோன் கால அளவு என்பது நீங்கள் கடன் வாங்கும் காலத்தை குறிக்கிறது. இது பொதுவாக 5 முதல் 30 வருடங்கள் வரை இருக்கலாம். கடன் பெறுபவர்கள் தங்களுடைய லோன் கால அளவை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். கடன் கால அளவு குறைவாக இருந்தால் EMI அதிக அளவில் இருக்கும். ஆனால், கடனை நீங்கள் விரைவாக செலுத்தி விடலாம். எனினும் கடன் கால அளவு பெரியதாக இருந்தால் EMI குறைவாக இருக்கும். ஆனால் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

பிராஸஸிங் கட்டணம்

பிராஸஸிங் கட்டணம் என்பது உங்களுடைய கடன் விண்ணப்பத்திற்காக கடன் வழங்குனரிடம் நீங்கள் செலுத்தும் ஒன் டைம் பேமெண்ட். இது பொதுவாக கடன் தொகையில் 0.25% முதல் 1% வரை இருக்கலாம்.

லோன் டு வேல்யூ (LTV) விகிதம்

எப்பொழுதும் ஒரு வீட்டை வாங்குவதற்கான முழு தொகையையும் உங்களால் கடனாக பெற இயலாது. இது பொதுவாக கடன் வழங்குனர் உங்களுக்கு எவ்வளவு தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். உதாரணமாக 70 லட்ச ரூபாய் சொத்துக்கு வங்கி 35 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தால் LTV விகிதம் என்பது 50% ஆகும்.

இதையும் படிக்க: தினமும் ரூ.4 கோடி சம்பாதிக்கும் பெண்; ஆனால், இவரை சிலர் ஏன் வெறுக்கின்றனர் தெரியுமா…?

ப்ரீ பேமெண்ட் மற்றும் ஃபோர் குளோசர் கட்டணங்கள்

ப்ரீ பேமெண்ட் என்பது கடன் கால அளவு முடிவதற்கு முன்பே முதல் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நீங்கள் செலுத்துவதற்கான ஆப்ஷன். அதே நேரத்தில் கடன் கால அளவுக்கு முன்பு முழு முதல் தொகையையும் நீங்கள் செலுத்த விரும்பினால் அது ஃபோர் குளோசர் என்று அழைக்கப்படுகிறது.

அமார்டைசேஷன் ஸ்கெடியூல்

கடன் கால அளவின்போது உங்களுடைய EMIகளை முதல் தொகை மற்றும் வட்டி தொகைகளாக பிரித்து காட்டக்கூடிய ஒரு அட்டவணைதான் இந்த அமர்டைசேஷன் ஸ்கெட்யூல். இது ஒவ்வொரு பேமெண்ட் பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை டிஸ்ப்ளே செய்யும்.

சான்க்ஷன் கடிதம்

கடன் வழங்குனர் உங்களுடைய கடன் விண்ணப்பத்தை அங்கீகரித்தவுடன் கடன் பெறுநர் ஒரு சான்க்ஷன் கடிதத்தைப் பெறுவார். இந்த கடிதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை, அதற்குண்டான வட்டி விகிதம், திருப்பி செலுத்துவதற்கான கால அளவு, EMI தொகை போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கு UPI யூஸ் பண்றது எப்படி….? தெரிஞ்சுக்கலாம் வாங்க…!

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

ஒரு ஹோம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலமாக உங்களுடைய கடனை வேறொரு கடன் வழங்குனருக்கு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். குறைந்த வட்டி விகிதங்கள் அல்லது நீண்ட கால அளவுகள் போன்ற நல்ல ஆஃபர் கிடைக்கும்போது, இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Source link