Last Updated:
Noise Air Buds 6 | நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 பட்ஸ்களின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாய்ஸ் இந்தியா அதன் ஆடியோ வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்நிறுவனம் புத்தாண்டில் புதிய பட்ஸ்களை, நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 என்ற பெயரில் கொண்டுவந்துள்ளது. இந்த பட்ஸ்கள் பிராகி என்ற ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க நிறுவனம் பல சிறப்பான மேம்பட்ட அம்சங்களுடன் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய பட்ஸ்கள் தெளிவான சவுண்ட் மற்றும் டீப் பாஸ் ஆகியவற்றிற்காக 12.4mm டிரைவர்களைக் கொண்டுள்ளன.
இந்த பட்ஸ்கள் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனை (ANC) ஆதரிக்கின்றன. இது 32db வெளிப்புற சத்தத்தை தடுக்க உதவுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 மணி நேரம் பயன்படுத்த முடியும். பட்ஸ்களைப் பொறுத்தவரை, இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பத்தின் காரணமாக, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 150 நிமிடங்களுக்கு அதாவது இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. சார்ஜிங் கேஸில் USB டைப்-C போர்ட் உள்ளது. இந்த பட்ஸ்களின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
நிறுவனம் அவற்றை வெறும் ரூ.2,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது தொடக்க விலை ஆகும். நீங்கள் அவற்றை நாய்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான gonoise.com, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றிலிருந்து வாங்க முடியும். இந்த TWS ஹெட்செட் தற்போது நிறுவனத்தின் இணையதளம் வழியாக ப்ரீ ஆர்டரில் கிடைக்கிறது. நாய்ஸ் ஏர் பட்ஸ் 6ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.399 செலுத்தி ரூ.899 மதிப்புள்ள கூப்பனைப் பெறலாம். இது சார்க்கோள் பிளாக், பெப்பிள் கிரே மற்றும் சாகி ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 விவரக் குறிப்புகள்:
குரல் அங்கீகாரத்தின் உதவியுடன், அவர்கள் விரும்பிய சேவைகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பாக அக்சஸ் செய்ய அனுமதிக்கிறார்கள். மேலும், கால்களின்போது தேவையற்ற வெளிப்புற இரைச்சல் எதுவும் இருக்காது. இது தவிர, ஒலியளவையும் தானாகவே சரிசெய்து கொள்கிறது.
இதையும் படிக்க: செல்போனில் இருக்கும் சிறிய துளையை கவனிச்சிருக்கீங்களா…? அந்த துளை ஏன் இருக்குன்னு நிறைய பேருக்கு தெரியாது…!
ஏர் பட்ஸ் 6இல் உள்ள வாய்ஸ் கன்ட்ரோல் அம்சமானது யூசர்களை பிளேலிஸ்ட்களை நிர்வகிக்கவும், சவுண்ட் அளவை சரிசெய்யவும் அனுமதிக்கிறது. இந்த TWS ஹெட்செட்டில் 50ms லோ லேட்டன்சி மோட், கூகுள் பாஸ்ட் பேர் ஆதரவையும், மல்டிபாயிண்ட் கனெக்டிவிட்டியையும் வழங்குகிறது. இது யூசர்களை நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 ஹெட்செட்களை ஒன்றுக்கும் மேற்பட்ட புளூடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைக்க அனுமதிக்கிறது. இயர்போன்கள் ஆனது இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்தைக் கொண்டுள்ளன மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IPX5 தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இது தவிர நாய்ஸ் பட்ஸ்லிங்க் ஆப்-ஐ கொண்டுள்ளன.
இதையும் படிக்க: ரூ.50,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகள்… எது சிறந்தது…?
நொய்ஸ் ஏர் பட்ஸ் 6 பேட்டரியானது அதன் செயல்திறனுக்காக பாராட்டப்படுகிறது. இந்த பட்ஸ்களின் 50 மணி நேர பேட்டரி ஆயுளானது, நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. வேகமான சார்ஜிங்கின் நன்மை என்னவென்றால், அதை வெறும் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் அதை 2.5 மணி நேரம் பயன்படுத்தலாம்.
January 14, 2025 2:34 PM IST