Last Updated:
Pana Kilangu Harvest: பொங்கல் சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய பனங்கிழங்கு எப்படி எடுக்குறாங்கன்னு இந்த பதிவில் பார்க்கலாம்…
இந்த காலத்தில் நாம் நினைத்தவுடன் ருசிக்க பலவிதப் பதார்த்தங்கள் கடைகளில் கிடைத்தாலும், நம் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலில் பனங்கிழங்கைச் சுவைக்காமல் பண்டிகை நிறைவடையாது. அப்படிப் பனை மரங்கள் அதிகம் காணப்படும் தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்குப் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
சாலையோரம் பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவதை மட்டுமே பார்த்த நமக்கு அதற்குப் பின்னால் உள்ள வேலைப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பனங்கிழங்கு ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பயிரிட்டு நான்கு மாதத்தில் விளைச்சலாகி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பனை மரத்திலிருந்து விழும் பனம்பழத்தை உரித்து காய வைத்து அதை மண்ணில் புதைப்பதன் மூலம் தவுன் உருவாகி தவுனில் இருந்து பனை கிழங்கு விளைச்சல் ஆகின்றது.
இதுகுறித்து விவசாயி பூமாரி கூறுகையில், “பனை தோப்பில் கீழே விழும் பனம்பழத்தை எடுத்து வந்து அதனை உரித்து நன்றாக காய வைப்போம், அதற்கே ஒரு மாதம் ஆகும். அதன் பிறகு அதனை மண்ணில் புதைத்து வைப்போம், பின்னர் அதிலிருந்து தவுன் உருவாகும் அதன் கீழே பனை கிழங்கு விளைச்சலாகும்.
இதையும் படிங்க: Virudhunagar Food Festival: விருதுநகர் மக்களே ஒரு புடி புடிக்க ரெடியா… மீண்டும் வருது உணவுத் திருவிழா…
இந்த பனை கிழங்கு விளைச்சல் ஆகுவதற்குச் சரியாக 4 மாத காலங்களாகின்றன. மார்கழி மாதத்திலேயே பனை கிழங்கை எடுக்க ஆரம்பித்து விடுவோம்.
புதைக்கப்படும் அனைத்து விதைகளிலிருந்தும் பனை கிழங்கு விளைச்சல் ஆகாது 1000 காயாவது நட்டம் தான் ஆகும். பனை கிழங்கு விளைச்சலில் பல கஷ்டங்கள் இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
January 14, 2025 7:03 PM IST