Last Updated:
அம்பத்தி ராயுடு பதிவு வெளியிட்டதால் தொடரின் இடையே 2 முறை வீரர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட போதும் ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என உத்தப்பா கூறியுள்ளார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம் பெறாமல் போனதன் பின்னணியில் விராட் கோலி இருந்ததாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனியார் ஊடகத்திற்கு உத்தப்பா அளித்த பேட்டியில், “2019 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சீருடை மற்றும் கிட் வழங்கப்பட்ட போதிலும், விராட் கோலிக்கு பிடிக்காத ஒரே காரணத்தால் அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் இடம் பெற்றார்.
அதை எதிர்த்து அம்பத்தி ராயுடு பதிவு வெளியிட்டதால் தொடரின் இடையே 2 முறை வீரர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட போதும் ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என உத்தப்பா கூறியுள்ளார்.
Also Read | Ajith | கார் ரேஸில் வெற்றியுடன் திரும்பிய அஜித்தை வரவேற்ற ஷாலினி… லைக்ஸை அள்ளும் வீடியோ!
அதன்பின் தனது ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு, 2 மாதங்களில் தனது முடிவை திரும்பப் பெற்றார். இருப்பினும், அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம் பெறவில்லை.
விராட் கோலி குறித்து ராபின் உத்தப்பா வெளிப்படையாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 13, 2025 7:15 AM IST