Last Updated:

இந்த மொபைல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. 

News18

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Vivo Y29 என்ற 5G ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.13,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு மிட்-ரேஞ்ச் டிவைஸ் ஆகும். இந்த மொபைல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஒரு குஷனிங் ஸ்ட்ரெக்ச்சரை கொண்டுள்ளது, இது வேவ் கிரஸ்ட் ஃபோன் கேஸுடன் இணைக்கப்படும் போது drop-resistant armour-ஆக செயல்படும் என்கிறது நிறுவனம். விவோவின் புதிய Y29 5G மொபைலானது மொத்தம் நான்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Vivo Y29 5G மொபைலின் விலை மற்றும் சலுகை விவரங்கள்:

விவோ நிறுவனத்தின் புதிய Y29 5G மொபைலானது 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB என மொத்தம் நான்கு வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.13,999, ரூ.15,499, ரூ.16,999 மற்றும் ரூ.18,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த மொபைலை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் ரூ.1,500 வரை கேஷ்பேக் பெறலாம். தவிர எஸ்பிஐ கார்டு, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், யெஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டு பயன்படுத்தினால் ரூ.1,399 முதல் EMI ஆப்ஷன்களை தேர்வுசெய்து V-ஷீல்டு டிவைஸ் ப்ரொட்டக்ஷனை பெறலாம். இந்த மொபைல் டயமன்ட் பிளாக், கிளேசியர் ப்ளூ மற்றும் டைட்டானியம் கோல்டு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Vivo India வெப்சைட் மூலம் இதனை வாங்கலாம்.

Vivo Y29 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இந்த டூயல் நானோ சிம் சப்போர்ட் கொண்ட விவோவின் Y29 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14-ல் இயங்குகிறது. இது120Hz ரெஃப்ரஷ் ரேட், 1,000 nits வரை பீக் பிரைட்னஸ், 264ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் குறைந்த நீல ஒளிக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழை கொண்ட 6.68-இன்ச் HD LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த மொபைலில் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை eMMC 5.1 ஆன்-போர்ட் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. வேரியன்டை பொறுத்து ரேமை கூடுதலாக 8GB வரை விரிவாக்க முடியும், அதே நேரத்தில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை 1TB வரை நீட்டிக்க முடியும்.

புதிய Y29 5G மொபைலின் பின்புறத்தில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 0.08MP இரண்டாம் நிலை சென்சாரையும் மற்றும் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 8MP சென்சார் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. ரிங் போன்ற LED ஃபிளாஷ் யூனிட் டைனமிக் லைட்டிங்கை சப்போர்ட் செய்கிறது, இது மியூசிக் பிளேபேக் அல்லது ரிமைண்டர்ஸ் மற்றும் பிற அலெர்ட்ஸ்களின் போது வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் விளக்குகளை கஸ்டமைஸ் செய்து கொள்ள யூஸர்களை அனுமதிக்கிறது.

இந்த மொபைல் 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 79 நிமிடங்களில் ஃபோனை 0-விலிருந்து 100% வரை சார்ஜ் செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது. இந்த ஃபோனிற்கு SGS 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் மற்றும் MIL-STD-810H டுயூரபிலிட்டி சான்றிதழ்கள் உள்ளன. இந்த மொபைலில் 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS, OTG, FM, USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த மொபைலின் மொத்த எடை 198 கிராம் ஆகும்.



Source link