Last Updated:

கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார்.

News18

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ என்ற படத்துடைய புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படக்குழு முன்பு வெளியான போஸ்டர்களுக்கு சற்று மாற்றமாக இந்த போஸ்டர் காமெடி நடிகர்களுடன் இடம்பெற்றுள்ளது.

கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார்.

காதலை மையமாக வைத்து அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக ரெட்ரோ உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான வீடியோ காட்சிகள், போஸ்டர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் சூர்யா சற்று மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க – Vijay Sethupathi | விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்…ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கு!

இந்த திரைப்படம் மே 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கலையொட்டி படக் குழுவினர் புதிய போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதில் சூர்யாவுடன் காமெடி நடிகர் சதீஷ், ஜெயராம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர்கள் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் புதிய போஸ்டர் மூலம் ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு .





Source link