Last Updated:

ரோஹித் சர்மா பேசுவது மைக் ஸ்டெம்பில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதில் ”ஹேய் ஜெய்ஸி.. நீ என்ன கல்லி கிரிக்கெட் விளையாடுறீயா” என்ன கோபமாக பேசுகிறார்.

News18

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வாலின் ஃபீல்டிங்கை பார்த்து கோபத்தில் ரோஹித் சர்மா திட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா பேசுவது மைக் ஸ்டெம்பில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதில் ”ஹேய் ஜெய்ஸி.. நீ என்ன கல்லி கிரிக்கெட் விளையாடுறீயா” என்ன கோபமாக பேசுகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. போட்டியின் ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக இளம் ஓபனர் சாம் கோன்ஸ்டாஸ் பும்ரா பந்தில் சிக்ஸர்களை விளாசி அரைசதம் விளாசினார்.

மேலும் போட்டியின் நடுவே கோலியும் கோன்ஸ்டாஸும் கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக தோள்பட்டை மோதல் ஏற்பட்டது. இதனால் கோலி, கோன்ஸ்டாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கோலிக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ஒழுங்கு நடவடிக்கைப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே பரபரப்பான கட்டத்தில் வேடிக்கையாக பீல்டிங் செய்த தனது இளம் சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரோஹித் சர்மா கடுமையாக கடிந்தார். ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்யும் ஸ்டீவன் ஸ்மித் அதனை ஸ்டோக் செய்தார். பந்து வேறு திசையில் போதும் போது சம்பந்தமில்லாமல் ஜெய்ஸ்வால் எகிறி குதிப்பார். இதை பார்த்த ரோஹித் சர்மா ”ஹேய் ஜெய்ஸி.. நீ என்ன கல்லி கிரிக்கெட் விளையாடுறீயா” என்ன கோபமாக கேட்கிறார். இந்த காட்சிகள் அனைத்து ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 68 ரன்களிலும் கேப்டன் பாட் கம்மின்ஸ் 8 ரன்களிலும் களத்தில் உள்ளனர். பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 300 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையில் உள்ளது.





Source link