Last Updated:

குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

News18

இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குவைத் சிட்டியில் உள்ள விடுதிக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்து, அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது, ராமாயணம் மற்றும் மகாபாரத நூல்களை அரபு மொழியில் பிரதமர் மோடி வெளியிட்டார். அரபு மொழியில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மொழிபெயர்த்தவர்களை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, குவைத்தில் உள்ள இந்தியர்களைப் பார்க்கும்போது, மினி இந்தியாவுக்கு வந்ததுபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, குவைத் சிட்டியில் GULF SPIC தொழிலாளர் முகாமில் இந்தியர்களை சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார்.

தொடர்ந்து அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு நான்கு மணி நேரமே என்றாலும், ஒரு இந்திய பிரதமராக குவைத் வருவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருப்பதாக கூறினார். குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்த பிரதமர் மோடி, புதிய குவைத் நாட்டை உருவாக்குவதற்கு தேவையான மனிதவளமும், திறனும் தொழில்நுட்பமும் இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?

இந்த அரசுமுறை பயணத்தில் குவைத் நாட்டின் முக்கியத் தலைவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச இருக்கிறார். 1981ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையடுத்து, 43 ஆண்டுளுக்கு பிறகு குவைத் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்திகள்/உலகம்/

2 நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி… ராமாயணம் மற்றும் மகாபாரத நூல்கள் அரபு மொழியில் வெளியீடு…



Source link