Last Updated:
இந்த டெஸ்டில் இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. இவர்கள் விளையாடினால் நிதிஷ்குமார் ரெட்டிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த தொடர் முழுவதுமே மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் 6-ஆவது வீரராக களம் இறங்கினார். தொடக்க வீரராக கே.எல். ராகுல் விளையாடினார். இதில் ரோகித் சர்மாவால் அணிக்கு பெரிய அளவில் ஸ்கோரை எடுத்துக்கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் நாளை தொடங்கும் 4-ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடுவதாக தகவல்கள் வெளிவந்துளளன.
இந்த டெஸ்டில் இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. இவர்கள் விளையாடினால் நிதிஷ்குமார் ரெட்டிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் நாளைய ஆட்டத்தை இந்திய அணியின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
நாளைய போட்டியில் விளையாடும் உத்தேச இந்திய அணி-
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ஹர்ஷித் ராணா
December 25, 2024 10:07 PM IST