Last Updated:

Game Changer | ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.186 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக வெளியாகி ஹிட்டடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.191 கோடியை வசூலித்தது.

News18

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படம் முதல் நாளில் ரூ.186 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ஹிட்டான முந்தைய படங்களின் வசூல் குறித்தும், அவற்றை ‘கேம் சேஞ்சர்’ முறியடிக்குமா என்பதையும் பார்ப்போம்.

‘இந்தியன் 2’ தோல்விக்குப் பிறகு ஷங்கரும், ‘ஆச்சார்யா’ பட தோல்விக்குப் பிறகு ராம் சரணும் இணைந்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் கதையை ஷங்கர் படமாக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜன.10) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையும் வாசிக்க: Vanangaan | வணங்கான் ரிவ்யூ: பாலா – அருண் விஜய் காம்போ கம்பேக் கொடுத்ததா? 

ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.186 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக வெளியாகி ஹிட்டடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.191 கோடியை வசூலித்தது.

ஒட்டுமொத்தமாக படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்தது. அதேபோல அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக படம் ரூ.

1800 கோடி வசூலை ஈர்த்தது. அந்த வகையில் தெலுங்கை முதன்மைப்படுத்தி வெளியான ‘கேம் சேஞ்சர்’ அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் இருப்பதால் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈர்க்கும் எனக் கூறப்படுகிறது.

Also Read: ‘இந்தியன் 2’ படத்தின் வசூலை முறியடித்ததா ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’?



Source link