பிரீமியம் போன் வேண்டுமானால், இந்த டிசம்பரில் இந்திய சந்தையில் ரூ.60,000க்கும் குறைவான விலையில் கவர்ச்சிகரமான வசதிகள் கொண்ட போன்களை வாங்கலாம். பட்டியலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 13 5G உட்பட மேலும் 3 போன்கள் உள்ளன. எனவே, உங்களுக்கு விருப்பமான போனை தேர்வு செய்து வாங்கலாம்.
iQOO 13 5G
iQOO 13 போன் ஆனது பிரபலமான IQ12இன் அப்டேடட் வெர்ஷன் ஆகும். இது 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் மூலம் வெறும் 30 முதல் 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃபிரெஷ் ரேட் உடன் சக்திவாய்ந்த AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில், டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50MP மெயின் சென்சார் உள்ளது. இது சிறந்த டேலைட் போட்டோகிராஃபி, லோ லைட் பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ரியல்மி GT 7 ப்ரோ
ரியல்மி GT 7 ப்ரோ ஆனது அதன் ஸ்லீக் டிசைன், பவர்ஃபுல் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் ஆகியவற்றால் ஈர்க்கிறது. iQOO 13 போலவே, இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது ஸ்மூத் மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் ஆகியவற்றை வழங்குகிறது. ரியல்மீ GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 1.5K ரெசலூஷன் மற்றும் 120Hz ரெஃபிரஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதில் 120W விரைவான சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில், குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த டேலைட் போட்டோகிராஃபியை வழங்குகிறது.
சியோமி 14
சியோமி இன் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனான சியோமி 14 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 120Hz ரெஃபிரேஷ் ரேட் மற்றும் டால்பி விஷனுடன் 6.36 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில், இது 50MP லைக்கா-டியூன் செய்யப்பட்ட மெயின் சென்சாரைக் கொண்டுள்ளது. இது கூர்மையான, ட்ரூ-டு-லைஃப் படங்களை உருவாக்குகிறது.
இதில் உள்ள அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் வெவ்வேறு லைட்டிங் கன்டிஷன்களிலும் நன்றாக வேலை செய்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது.புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. குறிப்பாக, தள்ளுபடியை கருத்தில் கொண்டு ரூ.50 ஆயிரத்தில் உள்ள சிறந்த போன்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒன்பிளஸ் 12R
இந்த பட்டியலில் உள்ள கடைசி ஃபோன் ஒன்பிளஸ் 12R ஃபிளாக்ஷிப் கில்லர் ஃபோன் ஆகும். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 1.5K ரெசலூஷன் மற்றும் 120Hz ரெஃபிரேஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.
இதையும் படிக்க: இனி போன் கால் மூலமாகவே ChatGPT-யிடம் பேசலாம்… OpenAI வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!
கேமராவைப் பொறுத்தவரையில், இது அல்ட்ரா-வைட் மற்றும் மேக்ரோ லென்ஸ்களுடன் 50MP பிரைமரி சென்சார் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் மற்றொரு சிறப்பம்சமாகும். இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh செல் உடன் வருகிறது, இதன் மூலம் வெறும் 30 நிமிடங்களில் இந்த ஃபோன் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
December 23, 2024 12:57 PM IST