Last Updated:

Itel A80 | இந்தியாவில் 4GB இன்டர்னல் ஸ்டோரேஜ் + 128GB ரேம் கொண்ட Itel A80 மொபைலின் விலை ரூ.6,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் தற்போது நாட்டில் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது.

News18

பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஐடெல் இந்தியா, சமீபத்தில் Itel A80 என்ற புதிய பட்ஜெட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட் ஃபோனாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய Itel A80 மொபைல் மலிவு விலையில், பல்வேறு அம்சங்கள் நிறைந்த டிவைஸாக யூசர்களுக்கு இருக்கும் என்கிறது நிறுவனம். இந்த மொபைல் மூன்று நாட்கள் வரை பேட்டரி லைஃபை வழங்குவதாக கூறப்படுகிறது. பேட்டரி ஸ்டேட்டஸ், நோட்டிஃபிகேஷன்ஸ் மற்றும் பிற அலெர்ட்ஸ்களை விரிவாகக் காட்டும் டைனமிக் பார் அம்சத்தை இந்த ஃபோன் பெறுகிறது.

இந்தியாவில் Itel A80 மொபைலின் விலை:

இந்தியாவில் 4GB இன்டர்னல் ஸ்டோரேஜ் + 128GB ரேம் கொண்ட Itel A80 மொபைலின் விலை ரூ.6,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் தற்போது நாட்டில் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த மொபைலை வாங்கியதில் இருந்து 100 நாட்களுக்குள் இலவச திரை மாற்றத்திற்கான (free screen replacement) உத்தரவாதத்துடன் வருகிறது. ஆன்லைனில் இந்த மொபைல் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மொபைல் கிளேசியர் ஒயிட், சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் வேவ் ப்ளூ உள்ளிட்ட மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

Itel A80 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இந்த மொபைல் 6.7 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 500 nits பீக் பிரைட்னஸ் லெவல் கொண்டது. இந்த டிவைஸ் 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் T603 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷனுடன் வழங்கப்படுகிறது. மேலும் இது 3 ஆண்டுகள் வரை லேக்-ஃப்ரீ செயல்திறனை வழங்கும் என கூறப்படுகிறது. புதிய A80 ஆனது 4GB விரிச்சுவல் ரேமையும் கொண்டுள்ளது.

இந்த ஃபோன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிக்கான IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது. Itel A80 மொபைலானது HDR சப்போர்ட்டுடன் கூடிய 50MP ப்ரைமரி ரியர் கேமரா மற்றும் கேமரா மாட்யூலுக்குள் ஒரு ரிங் லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், தெளிவான வீடியோ கால்ஸ் மற்றும் செல்ஃபிக்களுக்காக 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைலானது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணி நேர வீடியோ ப்ளேபேக் அல்லது 31 மணி நேர கால் டைம் உட்பட மூன்று நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

இதையும் படிக்க: 50 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 இந்தியாவில் அறிமுகம்…!

இது USB டைப்-சி போர்ட் மூலம் 10W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்ட்ரா பவர் சேவிங் மோடை கொண்டுள்ளது. இந்த டிவைஸ் மேம்படுத்தப்பட்ட சிக்னல் நிலைத்தன்மைக்காக Smart Link+-ஐ கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக ஐடெல் நிறுவனத்தின் A80 ஆனது சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது.



Source link