Last Updated:
சீனாவில் அறிமுகமான சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் சமீபத்தில் ஒப்போ நிறுவனம் தனது Reno 13 5G மற்றும் Reno 13 Pro 5G ஆகிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் அறிமுகமான சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் சமீபத்தில் ஒப்போ நிறுவனம் தனது Reno 13 5G மற்றும் Reno 13 Pro 5G ஆகிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரெனோ சீரிஸ் மொபைல்கள் மீடியா டெக்கின் டைமன்சிட்டி 8350 சிப்செட்டில் இயங்குகின்றன. இவை 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன மற்றும் சிக்னல்பூஸ்ட் X1 சிப்பைக் கொண்டுள்ளன.
விலை விவரங்கள்: Reno 13 Pro 5ஜி மொபைலானது 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ.49,999 மற்றும் ரூ.54,999 ஆகும். இந்த மொபைல் கிராஃபைட் கிரே மற்றும் மிஸ்ட் லாவெண்டர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதே நேரம் Reno 13 5G மொபைல் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.37,999 மற்றும் ரூ.39,999-ஆக உள்ளது. மேற்கண்ட இரண்டு மாடல்களும் கடந்த ஜனவரி 11 முதல் Flipkart மற்றும் Oppo-வின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்க கிடைக்கின்றன.
சிறப்பம்சங்கள்: டூயல் சிம் (நானோ) சப்போர்ட் கொண்ட புதிய ஒப்போ ரெனோ 13 5G சீரிஸ் மொபைல்கள் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ColorOS 15-ல் இயங்குகிறது. இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள ப்ரோ மாடலில் 6.83-இன்ச் 1.5K (1,272×2,800 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz டைனமிக் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 450ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 1200nits பீக் பிரைட்னஸஸுடன் உள்ளது.
அதே நேரம் ஸ்டாண்டர்ட் மாடல் 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் , 460ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 1,200nits பீக் பிரைட்னஸுடன் சற்று சிறிய 6.59-இன்ச் ஃபுல் HD+ AMOLED ஸ்கிரீனை கொண்டுள்ளது. இந்த 2 மாடல்களும் 4nm MediaTek Dimensity 8350 சிப்செட்டில் இயங்குகின்றன. இது 12GB LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS 3 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 2 மாடல்களும் 50-MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளன. ப்ரோ மாடலில் ட்ரிபிள் கேமரா யூனிட் உள்ளது, இதில் OIS உடன் 50-MP சோனி IMX890 1/1.56-இன்ச் பிரைமரிகேமரா, 3.5x ஆப்டிகல் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் மற்றும் OIS உடன் 50-MP JN5 டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8-MP OV08D சென்சார் உள்ளிட்டவை அடங்கும். அதே நேரம் Reno 13 5G மொபைல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது, இதில் OIS உடன் கூடிய 50-MP பிரைமரி கேமரா மற்றும் 8-MPஅல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். Reno 13 5G சீரிஸ் மொபைல்களில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த மொபைல்கள் IP66+IP68+IP69 ரேட்டிங்ஸை கொண்டுள்ளன. மேம்பட்ட சிக்னல் கவரேஜை வழங்குவதாகக் கூறப்படும் Oppo-வின் X1 நெட்வொர்க் சிப் உள்ளது. Reno 13 Pro மாடல் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மாடலில் 80W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,600mAh பேட்டரி உள்ளது.
January 15, 2025 11:45 AM IST