Last Updated:

மெலிந்தவரின் இறைச்சியை சாப்பிடுவது பிடிக்காது என்றும் கொழுத்த மனிதனின் இறைச்சி சுவையாக இருக்கும் என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது பேசும் விதமும், ரசனையை வெளிப்படுத்தும் விதமும் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

News18

உலகின் பல்வேறு பகுதிகளில் பல வகையான விலங்குகளின் இறைச்சி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில நாடுகளில் கோழி இறைச்சியும் இன்னும் சில நாடுகளில் ஆட்டு இறைச்சியும் விரும்பி சாப்பிடப்படுகின்றன. மத்திய கிழக்கு அரபு நாடுகளை பொறுத்தவரையில் அங்கு ஆடுகள், ஒட்டகம் உள்ளிட்டவை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விரும்பும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மக்கள் நாய் இறைச்சிகளை அதிகம் விரும்புகிறார்கள். தாய்லாந்தில் தற்போது முதலை இறைச்சியை உணவாக சாப்பிடுவது அதிகரித்து வருகிறது.

மனிதன் மற்ற விலங்குகளை சாப்பிடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மனிதனே மனித இறைச்சியை சாப்பிட்டிருப்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா? இதைய யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு சம்பவத்தை செய்ததாக ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மனித இறைச்சியின் சுவை குறித்து அந்த வீடியோவில் பேசுகிறார். அவரது பெயர் நிக்கோ கிளாக்ஸ் என்பதாகும்.

அவர் மனித இறைச்சியை உண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சை சேர்ந்த அவர் மனித மாமிசத்தின் சுவை குறித்து ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அதில் அவருக்கு சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி விட மனித மாமிசம் தனக்கு விருப்பமானது என்று தெரிவித்துள்ளார்.

மனித இறைச்சி குதிரையின் இறைச்சியை போன்று இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மெலிந்தவரின் இறைச்சியை சாப்பிடுவது பிடிக்காது என்றும் கொழுத்த மனிதனின் இறைச்சி சுவையாக இருக்கும் என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது பேசும் விதமும், ரசனையை வெளிப்படுத்தும் விதமும் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

இதையும் படிங்க – அமெரிக்காவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த திணறும் அரசு..! தற்போதைய நிலை என்ன?

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் செய்திகள்/உலகம்/

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! மனித மாமிசத்தின் சுவை குறித்து வீடியோ வெளியிட்ட நபர்…





Source link