Last Updated:

இந்தியாவில் ரூ.15000க்கு கீழ் உள்ள சில சிறந்த டூயல் கேமரா போன்கள் பற்றிய தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம். இந்த பட்டியலில் போக்கோ M7 ப்ரோ 5G, உட்பட மற்ற மூன்று ஸ்மார்ட்போன்களும் உள்ளன.

News18

புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் புத்தாண்டை ஸ்டைலாகத் தொடங்க விரும்புகிறீர்களா? தற்போது, மலிவு விலையில் 5G ஸ்மார்ட்போன்களில் சில அருமையான சலுகைகளை நீங்கள் பெறப் போகிறீர்கள்.

இந்த போன்களில் நல்ல டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன் நீண்ட பேட்டரி ஆயுள் கிடைக்கும். இது தவிர, இந்த போன்களின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அவற்றில் மிக சக்திவாய்ந்த கேமராவை நீங்கள் பெறுவீர்கள். இந்தியாவில் ரூ.15000க்கு கீழ் உள்ள சில சிறந்த டூயல் கேமரா போன்கள் பற்றிய தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம். இந்த பட்டியலில் போக்கோ M7 ப்ரோ 5G, உட்பட மற்ற மூன்று ஸ்மார்ட்போன்களும் உள்ளன.

போக்கோ M7 ப்ரோ 5G

போக்கோ M7 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் 8GB ரேம் கொண்ட மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இது தவிர, இந்த போக்கோ போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS மூலம் இயங்குகிறது.

CMF ஃபோன் 1

CMF ஃபோன் 1 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் 50MP மெயின் கேமரா உள்ளது. இது தவிர, இந்த CMF போனில் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் (Nothing) OS2.6 மூலம் இயங்குகிறது.

ரெட்மி 13 5G

ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் 6080 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைலில் 108MP பிரைமரி கேமரா உள்ளது. இது தவிர, இந்த ரெட்மி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS மூலம் இயங்குகிறது.

Also Read | மீனுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.. என்னென்ன தெரியுமா?

மோட்டோரோலா G64 5G

மோட்டோரோலா (Motorola) G64 5G ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் 50MP மெயின் கேமரா உள்ளது. இது தவிர, இந்த மோட்டோரோலா போனில் மிகப்பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. மோட்டோ G64 5G ஆனது 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.



Source link