Last Updated:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தானில் ரோஹித் சர்மா கடைசியாக 2008 இல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும்  பாகிஸ்தான் சென்று பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 19 ஆம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்போட்டிகள் பாகிஸ்தானில் தொடங்க இருக்கிறது.பாகிஸ்தானில் நடக்க இருக்கும் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா வரும் பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் மட்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா  பாகிஸ்தானுக்கு சென்று பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க – BCCI | மனைவிகளால் இந்திய வீரர்களுக்கு வந்த சிக்கல்.. பிசிசிஐ கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.



Source link