Last Updated:
Oscar Award | பரிந்துரைப் பட்டியலை வெளியிடுவது 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்கர் ரத்தாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்கான இறுதி பரிந்துரை பட்டியலை, வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் பணியில் அகாடமி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியல் ஜனவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காட்டுத்தீயால், 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காட்டுத்தீயின் கோரம் அடங்காததால், இறுதி பரிந்துரைப்பட்டியல் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என ஆஸ்கர் அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: Netflix | கமல்..அஜித்..சூர்யா..டாப் ஹீரோ படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்..லிஸ்ட் இதோ!
பரிந்துரைப் பட்டியலை வெளியிடுவது 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்கர் ரத்தாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலேயே ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதால், காட்டுத்தீ காரணமாக ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
January 15, 2025 4:35 PM IST