Last Updated:

உலகின் சுமார் 46% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடப்பதாகவும், இது நாட்டின் டிஜிட்டல் சக்தியை வெளியுலகிற்கு எடுத்து காட்டுகிறது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் முன்னேற்றம் மற்றும் புதிய கொள்கைகள் குறித்தும் பேசினார்.

News18

டைம்ஸ் நெட்வொர்க்கின் இந்திய பொருளாதார மாநாடு (IEC) 2024 பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியா ஒவ்வொரு மாதமும் சுமார் 16,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கையாள்வதாகவும், இதன் மதிப்பு $280 பில்லியன் (3.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும்) என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உலகின் சுமார் 46% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடப்பதாகவும், இது நாட்டின் டிஜிட்டல் சக்தியை வெளியுலகிற்கு எடுத்து காட்டுகிறது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் முன்னேற்றம் மற்றும் புதிய கொள்கைகள் குறித்தும் பேசினார்.

நாட்டில் தொலைத்தொடர்புக்கான செலவுகள் எவ்வாறு கணிசமாக குறைந்துள்ளன மற்றும் முன்பு இருந்ததை விட தற்போது தொழில்நுட்பம் எப்படி அனைவரும் எளிதில் அணுக கூடியதாக மாறியுள்ளது என்பதை பற்றியும் மத்திய அமைச்சர் இந்த நிகழ்வில் அடிக்கோடிட்டு காட்டினார். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முன்பு நிமிடத்திற்கு 51 பைசா செலவான வாய்ஸ் கால்களுக்கு தற்போது 3 பைசா மட்டுமே செலவாகிறது.

முன்பு ரூ.280-க்கு விற்கப்பட்ட 1 ஜிபி டேட்டா இப்போது ரூ.9.18-க்கு கிடைக்கிறது. துவக்கத்தில் இருந்ததை ஒப்பிடும் போது செலவுகள் 97 சதவீதம் குறைந்துள்ளன என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அனைத்து வகையான தகவல் தொடர்பு சேவைகளையும் வழங்குவதே அரசின் முன்னுரிமை என்று சிந்தியா கூறினார்.

இந்தியாவின் டெலிகாம் மேம்பாடு குறித்து பேசுகையில், இன்று இந்தியாவில் 116 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்புசுமார் 250 மில்லியனாக மட்டும் இருந்த இணையத் திறன் இன்று 954 மில்லியனாக அதிகரித்துள்ளது, பிராட்பேண்ட் 60 மில்லியன் சந்தாதாரர்களில் இருந்து 920 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார். வரும் ஜூன் 2025-க்குள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நெட்வொர்க் கவரேஜ் உறுதி செய்யப்படும். எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டார்.

அதே போல இந்தியாவை உலகளவில் புதுமைக்கான தளமாகவும் நிலைநிறுத்துவதற்கான மதியாய் அரசின் two-pronged strategy” பற்றியும் சிந்தியா பேசினார். இந்தியாவை உலக அரங்கிற்கு அழைத்துச் செல்வதும், பின் உலகை இந்தியாவை நோக்கி கொண்டு வருவதும் தான் இலக்கு” என்று அவர் கூறினார். ஜி20 உச்சி மாநாட்டை இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், ஜி20 வரலாற்றில் முதல் முறையாக நிகழ்வுகள் ஒரு நாட்டின் தலைநகருடன் மட்டும் நின்றுவிடாமல் 52 நகரங்களில் நடைபெற்றதை குறிப்பிட்டார். பிரேசில் இதே முறையை பின்பற்ற முயற்சித்ததை அடிக்கோடிட்டு காட்டினார்.



Source link