Last Updated:

vidamuyarchi: பொங்கல் வெளியீட்டிலிருந்து படம் தள்ளி சென்றது. இதற்குப் பிறகு சிக்கலை தீர்த்து ஜனவரி 23ஆம் தேதி வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.

விடாமுயற்சி

அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.

அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. அதுவும் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றியடைந்த பிரேக் டவுன் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என சிக்கல் நீடித்து வந்தது.

இதன் காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து படம் தள்ளி சென்றது. இதற்குப் பிறகு சிக்கலை தீர்த்து ஜனவரி 23ஆம் தேதி வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது படத்தின் வெளியிட்டு தேதி பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அந்த ட்ரெய்லரில் படத்தின் வெளியீட்டு தேதி இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Source link