உலகில் 100 வயதிற்கு மேல் அதிகமாக வாழும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது ஜப்பான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர், 65 வயதை கடந்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இப்படியே சென்றால் காலப்போக்கில் வயதானவர்கள் மட்டும் அதிகம் வாழும் நாடாக மாறிவிடுமே என்ற அச்சம் அந்த நாட்டின் ஆட்சியாளர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இதற்கு தீர்வாக அதள பாதாளத்துக்கு சென்ற பிறப்பு விகிதத்தை மீட்டெடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கையில் எடுத்துள்ள திட்டம் தான், வாரத்தில் 3 நாள் விடுமுறை.

கடுமையான உழைப்பாளிகளைக் கொண்ட ஜப்பானில் அதிக நேர வேலை செய்யும் கலாசாரம் உள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜப்பானில் 72 சதவீத ஆண்களும் 55 சதவீத பெண்களும் பணிக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த விகிதாச்சாரம், அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை விடவும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

இதனால் பெரும்பாலும் ஆண்கள் வேலை, வேலை என குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதே கிடையாது என்று கூறப்படுகிறது. அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளை பெற்றுக் கொள்வது பெண்களுக்கு கூடுதல் சுமையாக மாறிவிடுகிறது. இது ஜப்பானில் குறைவான கருவுறுதலுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஐப்பான் சுகாதார அமைச்சகத்தின்படி, அந்நாட்டில் கடந்த ஆண்டு வெறும் 7 லட்சத்து 27 ஆயிரத்து 277 பிறப்புகள் மட்டுமே பதிவாகின. இது போன்ற குறைவான பிறப்பு விகிதமும், வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தலைநகர் டோக்கியோவில், பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்படும் ஆளுநர் யுரிகோ கோய்கே அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆன்லைனில் ஸ்டிக்கர்களை விற்று மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் பிரிட்டிஷ் இளைஞர்…! 

பணிக்கு செல்வோரின் உடல் மற்றும் மனநலத்தை சீராக வைத்து குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையிலும், பெண்கள் மட்டுமே குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற பாலின ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/உலகம்/

4 Day Work Week | இனி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை… 3 நாட்கள் விடுமுறை… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு… எங்கு தெரியுமா?



Source link