Last Updated:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.
இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், கலினின் கிராட் நகரில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் துஷில் என்ற கப்பலை அறிமுகப்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று (10ம் தேதி) மாஸ்கோ நகருக்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
#JUSTIN ரஷ்ய அதிபர் புதினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு#VladimirPutin #RajnathSingh #Moscow #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/plHjjwNjRm
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 10, 2024
அதனைத் தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது எக்ஸ் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்து, ‘அதிபர் புதினை சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டுள்ளார்.
December 10, 2024 10:14 PM IST