Last Updated:

Israel vs Hamas | போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

News18

கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் பாலஸ்தீன மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இஸ்ரேல் தடுப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. இந்தப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: BAPS Hindu Mandir: அபுதாபி கோவிலில் புத்தாண்டு விழா… 20 நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு..

இந்த போர் நிறுத்த ஒப்பந்தமானது வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு வந்த நேரத்திலும், காசா முனையில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

இந்த தாக்குதலில் 30 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். மேலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 வாரங்களில் படிப்படியாக இஸ்ரேலிய படைகள் காசா முனையில் இருந்து வெளியேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இந்த போர் நிறுத்தமானது இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும். பாலஸ்தீன மக்களுக்கு தற்போதைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் தேவை.

15 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் மீண்டும் அவரவர் குடும்பங்களுடன் இணைய உள்ளனர்” என்றார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



Source link