Last Updated:

Saif Ali Khan | தன் வீட்டுக்கு திருட வந்த திருடனால் கத்திக்குத்துக்கு உள்ளாக்கப்பட்ட சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சைஃப் அலிகானுக்கு 2 ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News18

தன் வீட்டுக்கு திருட வந்த திருடனால் கத்திக்குத்துக்கு உள்ளாக்கப்பட்ட சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சைஃப் அலிகானுக்கு 2 ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் இருக்கிறது பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீடு. இந்த வீட்டுக்குள் நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் திருடன் ஒருவன் புகுந்து திருட முயற்சித்ததாகவும், அப்போது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் மீது கொள்ளையன் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை தடுக்க வந்த சைஃப் அலி கானை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கிவிட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பித்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான சைஃப் அலி கான் மும்பையின் லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: OTT Spot | இந்த வார ஓடிடியில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?…லிஸ்ட் இதோ!

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், “சைஃப் அலிகானுக்கு மொத்தம் 6 கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 2 காயங்கள் ஆழமானதாகவும், முதுகெலும்புக்கு அருகில் ஒரு காயமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சைஃப் அலி கான் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் மற்றும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link