Last Updated:
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘டிரைன்’ படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘டிரைன்’ படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பிசாசு 2’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்துக்கு ‘டிரைன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கிறார். மிஷ்கினே படத்துக்கு இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்தப் படத்தின் சிறப்பு வீடியோவை, விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், டிரைனுக்குள் விஜய்சேதுபதி நடந்து செல்வது, மிஷ்கினுடன் டப்பிங் பணிகளில் ஈடுபட்டது போன்ற காட்சிகளுடன், ஆக்ரோஷமாக கதறும் விஜய்சேதுபதி அடுத்த நொடியே நார்மலாகிவிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
January 16, 2025 12:01 PM IST