Last Updated:
Shankar | ‘ஜீன்ஸ்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் என தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்த கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
‘ஜீன்ஸ்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தான் என தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்த கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச் செல்வனுக்கு இயக்குநர் ஷங்கர் பேட்டியளித்திருந்தார். அதில் கேம் சேஞ்சர் படம் உருவான விதம் குறித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, “கேம் சேஞ்சர் திட்டமிடப்படாத திரைப்படம். கொரோனா காலத்தில் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படங்கள் என் கையில் இருந்தன. சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் 3 பகுதி திரைக்கதையை எழுதி வைத்திருந்தேன்.
அத்துடன் சயின்ஸ் ஃபிக்ஷன், ஸ்பை த்ரில்லர் என அடுத்தடுத்த கதைகள் எனக்குள் இருந்தன. ஆனால் இதை எதையும் அன்றைக்கு என்னால் பண்ண முடியாத சூழல் இருந்தது. அன்று நிறைய தயாரிப்பாளர்கள் படம் பண்ணலாம் என கேட்டபோது என்னிடம் கதையில்லை.
கொரோனா காலத்தில் இயக்குநர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு கதை எனக்கு பிடித்திருந்தது. அப்படித்தான் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பயணம் தொடங்கியது” என்றார்.
மேலும், ‘ஜீன்ஸ்’ படத்தில் அஜித் நடிப்பதாக இருந்ததாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், “நிறைய செய்திகள் வருகிறது. அதில் சில செய்திகள் உண்மை. சில செய்திகள் பொய். அப்படிப் பார்க்கும்போது ‘ஜீன்ஸ்’ படத்தில் என்னுடைய முதல் தேர்வு பிரசாந்த் தான்” என்றார்.
January 16, 2025 1:50 PM IST