Last Updated:

நிலநடுக்கம் குறித்து அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்ததாகவும், கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நீச்சல் குளங்கள் குலுங்கிய நிகழ்வு, காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ன்டேல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன.

இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் காரணமாக கலிபோர்னியாவில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடலோர பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்ததாகவும், கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link