Last Updated:
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.
நோக்கியா இந்த நிறுவனத்தின் லைன்அப்-ல் தொடர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இனிமேல் இந்தியாவில் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் ஃபோன்ஸ்களை (features phones) நீங்கள் வாங்க நினைத்தால் மட்டுமே உங்களுக்கு நோக்கியா ஃபோன்கள் இனி கிடைக்கும். அதாவது 1990-களில் நோக்கியாவின் மிக பெரிய வெற்றிகளைப் போன்ற குறைந்த விலை ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே HMD இப்போது நோக்கியாவின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான HMD வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் HMD பெயர் தாங்கி கொண்டிருப்பவை என்பதை கவனித்தோம்.
அதே நேரம் HMD வெப்சைட்டில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் ப்ராடக்ட் பேஜை திறக்கும் போது, அது விற்பனை நிறுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் discontinued என காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நோக்கியா XR21 உட்பட நோக்கியா பிராண்டட் போன்களை HMD வெபிசிட்ம் “இனி கிடைக்காது” என்று பட்டியலிட்டு உள்ளது. HMD தனது சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வெப்சைட்டை மறுசீரமைத்துள்ளதை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
அதேபோல் நிறுவனத்தின் வெப்சைட்டில் காட்டப்பட்டுள்ள விவரங்களின்படி, நோக்கியா T சீரிஸ் டேப்லெட்கள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. முன்பு ஆண்ட்ராய்டில் இயங்கும் நோக்கியா போனுக்காக மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர், பலரின் இந்த ஆசை இறுதியாக HMD குளோபலின் உதவியுடன் நிஜமானது. ஆனாலும் ஆண்ட்ராய்டில் இயங்கிய நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்தியாவில் கூட, நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் மார்க்கெட் ஷேர் பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் ஒருபோதும் இடம் பெறவில்லை, மேலும் நோக்கியா பிராண்ட் உரிமம் முடிவுக்கு வந்ததால், HMD குளோபல் நிறுவனம் தனக்கென்று சொந்த பிராண்டட் பாதையில் செல்ல முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக அப்போதிருந்து நிறுவனம் ஏராளமான HMD போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படியிருந்தாலும் நோக்கியா பிராண்டிற்கு இது ஒரு பெரிய பின்னடைவே. இனி நிறுவனம் அதன் ஃபீச்சர் போன்கள் மூலம் யூஸர்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும். மேலும் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களை தற்போது விற்பனையில் இருந்து வரும் நோக்கியா ஃபீச்சர் ஃபோன்கள் ரைவில் முடிவுக்கு வராது என்று நம்புவோம்.
January 16, 2025 5:31 PM IST