Last Updated:

38 வயதாகும் ரவிச்சந்திரன் அஷ்வின் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை கைப்பற்றிய கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இந்திய வீரராக டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரை ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

News18

டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் பெர்த், அடிலெய்ட் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றன.

பிரிஸ்பேனில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்திய ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது-

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதில் அஷ்வின் உறுதியாக இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் இடையே பெர்த் வந்திருந்த போது இதனை கேள்விப்பட்டேன். இந்த போட்டியின் முதல் 4 நாட்கள் நான் அணியுடன் இல்லை. அப்போதும் கூட அஷ்வின் ஓய்வு குறித்து உறுதியாக இருந்தார்.

இது பற்றி விளக்கமாக அவர்தான் பதில் சொல்ல முடியும். அணியில் சில சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் ஆஸ்திரேலியா மைதானங்களுக்கு ஏற்ப எந்த வீரர் விளையாடப் போகிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விளையாட வேண்டும் என்று அவரிடம் கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.

மூன்றாவது போட்டியில் அவர் விளையாடவில்லை. இது பற்றி அவர், இந்த தொடரில் தான் இப்போது தேவை இல்லை என்றால் விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இவ்வாறு ரோஹித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதையும் படிங்க – கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிரச்னையா? அஷ்வின் ஓய்வு அறிவித்ததன் பின்னணி என்ன?

38 வயதாகும் ரவிச்சந்திரன் அஷ்வின் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை கைப்பற்றிய கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இந்திய வீரராக டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரை ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.



Source link