Last Updated:

Vidamuyarchi Trailer | அஜித்தின் சண்டை காட்சிகள், கார் ரேஸிங் என படத்தின் முழு ட்ரெய்லரும் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

News18

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தல் பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து ‘விடாமுயற்சி’ பின்வாங்கியது. பின்னர், துபாய் கார் ரேஸின்போது தனது படங்கள் தொடர்பாக அஜித்குமார் கொடுத்த பேட்டியால் இப்படம் ஜனவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது.

அஜித்தின் சண்டை காட்சிகள், கார் ரேஸிங் என படத்தின் முழு ட்ரெய்லரும் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் விடாமுயற்சி படம் பிப்ரவரி 06 ஆம் தேதி வெளியாகும் என்றும் ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இன்று வெளியிடப்பட்டிருக்கும் ட்ரெய்லரில், அஜித்தின் இளமை தோற்றம், அதிரடி காட்சிகள், கார் சேச்சிங் என விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 2 நிமிடம் 22 நொடிகள் ஓடக்கூடிய அந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



Source link