அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு

இந்த கிரெடிட் கார்டுடன் பிரைம் மெம்பர்கள் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கும் 5% கேஷ்பேக்கை பெறலாம். அதே நேரத்தில் நீங்கள் பிரைம் மெம்பராக இல்லாவிட்டால் உங்களுக்கு 3% கேஷ்பேக் கிடைக்கும். இது குறிப்பாக அமேசானில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டுக்கு எந்த ஒரு ஆண்டுவாரியான கட்டணமோ அல்லது மறைமுக கட்டணமோ கிடையாது. இந்த கார்டை நீங்கள் அமேசான் பே -ல் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பேமெண்ட்கள் செலுத்தும் பொழுது 2% கேஷ்பேக்கை பெறலாம்.

கேஷ்பேக் SBI கார்டு

இந்த கார்டு நீங்கள் ஆன்லைனில் செலவு செய்யும் அனைத்து பேமெண்ட்களுக்கும் 5% கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கார்டை வாங்குவதற்கு நீங்கள் 999 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அடுத்த வருடத்தில் நீங்கள் செலுத்திய தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த கார்டு மூலமாக நீங்கள் பெரும் கேஷ்பேக் அடுத்த ஸ்டேட்மெண்ட் உருவாவதற்கு 2 நாட்களுக்குள் உங்களுடைய SBI கார்டு அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும்.

HDFC பேங்க் மில்லினியா கிரெடிட் கார்டு

இது Amazon, Flipkart, Myntra மற்றும் பிற போன்ற பிரபலமான பிளாட்ஃபார்ம்களில் நீங்கள் செய்யும் பேமெண்ட்களுக்கு 5% கேஷ்பேக் வழங்குகிறது. மேலும் பிற பிரிவுகளுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த கார்டுக்கான கட்டணம் 1000 ரூபாய் மற்றும் பொருந்தக்கூடிய வரிகளையும் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு காலாண்டுக்கும் நீங்கள் செலவு செய்யும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான தொகைக்கு 1000 ரூபாய் மதிப்பிலான வவுச்சர்களை பரிசாக பெறலாம்.

Flipkart ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு

Flipkartல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 5% கேஷ்பேக் மற்றும் Swiggy, PVR, CultFit, Uber போன்றவற்றில் நீங்கள் செய்யும் பேமெண்ட்டுகளுக்கு 4% கேஷ்பேக் கிடைக்கும். இந்த கார்டை பெறுவதற்கு நீங்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும். கார்டை வாங்கிய அடுத்த வருடத்தில் உங்களுடைய செலவு 3.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ஆண்டுவாரியான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

ஆக்சிஸ் பேங்க் ACE கிரெடிட் கார்டு

இந்த கார்டு பில் பேமெண்ட்கள் மற்றும் Google Pay மூலமாக செய்யும் ரீசார்ஜ்களுக்கு 5% கேஷ்பேக்கையும், Swiggy, Ola மற்றும் Zomato போன்ற பிளாட்ஃபார்ம்களுக்கு 4% கேஷ்பேக்கையும், நீங்கள் செலவு செய்யும் பிற விஷயங்களுக்கு 1.5% வழங்குகிறது. இந்த கார்டை வாங்குவதற்கு நீங்கள் 499 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கார்டு வாங்கிய அடுத்த வருடத்திற்குள் உங்களுடைய செலவு 2 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

*நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்வது நீங்கள் பெரும் கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகளை அதிகப்படுத்துவதற்கு உதவும்.

*கார்டு வாங்குவதற்கும் ஆண்டுவாரியான கட்டணமும் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்ட பிறகு கிரெடிட் கார்டு வாங்குவது அவசியம்.

*மேலும் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது உங்களுடைய கிரெடிட் லிமிட் அந்த பொருளை வாங்க போதுமானதாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

*ஒரு சில கார்டுகள் எளிமையான EMI ஆப்ஷன்களை கூட வழங்குகின்றன. இது உங்களுடைய பொருளாதார சுமையை குறைக்கும்.



Source link