Last Updated:

2013ஆம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்த பிறகு, கிரிக்கெட் ஆல்-ஸ்டார் சீரீஸ், ரோட் சேப்டி சீரீஸ் உள்ளிட்ட சில தொடர்களில்

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ஆம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் ஆல்-ஸ்டார் சீரீஸ், ரோட் சேஃப்டி சீரீஸ் உள்ளிட்ட சில தொடர்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், தற்போது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது.

இத்தொடரில் இந்தியாவுடன் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன. இந்த தொடர், பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை, நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர், இந்த மூத்த வீரர்களுக்கான போட்டியின் ஆணையாளராக உள்ளார்.

இதையும் படிக்க: ரஞ்சி தொடரில் விளையாட தயாராகும் ரோஹித் சர்மா.. மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி

வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா வழிநடத்த உள்ளார். இலங்கை அணியை குமார் சங்கக்காரவும், தென்னாப்பிரிக்க அணியை ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை முறையே இயன் மோர்கன் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரும் வழிநடத்த உள்ளனர்.

போட்டி ஆணையாளர் கவாஸ்கர், “சர்வதேச மாஸ்டர்ஸ் லீக், கிரிக்கெட்டின் சிறப்பை வெளிப்படுத்தும். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் சிலரை இது ஒன்றிணைக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



Source link