Last Updated:

கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News18

கடந்த திங்கட்கிழமை ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் ஹேண்ட் செட் உடன் சேர்த்து ரெட்மியின் இயர்பட்ஸ் 6 – TWS இயர்போன் மாடலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 49dB ஹைபர் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் 360 டிகிரி ச்பேஷியல் ஆடியோ வசதியும் இதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் மற்றும் தூசிக்கான IP54 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 42 மணி நேரம் வரை நீடித்த பேட்டரியை தரும் என ரெட்மி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெட்மி பட்ஸ் 6 – இன் விலை என்ன? :

இந்தியாவைப் பொறுத்தவரை ரெட்மி நோட் 6 இன் ஆரம்ப விலை ரூபாய்.2,999/- அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு அறிமுகமாகும். அறிமுகச் சலுகையாக ரூபாய்.2799/- க்கு வாடிக்கையாளர்கள் இதனை ஆன்லைன் வழியாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகை டிசம்பர் 13 முதல் டிசம்பர் 19ஆம் தேதிக்குள்ளாக இயர்பட்ஸ் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வழியாக அமேசான் வலைதளத்திலும் சியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும், ஜியோமி ரீடைல் ஸ்டோர் வழியாகவும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்க முடியும். இந்த TWS இயர்போன் ஐவி க்ரீன், ஸ்பெக்டர் பிளாக் மற்றும் டைட்டன் ஒயிட் என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரெட்மி பட்ஸ் 6- ன் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

ரெட்மி பட் 6 இயர் போன் 12.4mm டைட்டானியம் மற்றும் 5.5 mm அளவுடைய மைக்ரோ பீசோ எலக்ட்ரிக் செராமிக்ஸ் யூனிட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வடிவமைக்கப்படும் இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகான் ஏர்டிப்ஸ் வடிவமைப்பிலேயே இந்த இயர்பட்ஸ் வடிவைக்கபட்டுள்ளது. இதைத் தவிர செயற்கை நுண்ணறிவினால் மெருகேற்றப்பட்ட ட்யூயல் மைக்ரோஃபோன் சிஸ்டம் மற்றும் விண்ட் நாய்ஸ் ரிடக்சன் டெக்னாலஜியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களில் பயணம் செய்யும்போதும், அதிக காற்றடிக்கும் இடங்களிலும், இரைச்சலான இடங்களிலும் கூட வாடிக்கையாளர்கள் தெளிவாக கால் பேச முடியும்.

இதனைத் தவிர 49dB ஆக்டிவ் நைஸ் ட்ரான்ஸ்லேஷன் வசதியுடன் கூடிய 360 டிகிரி ஸ்பேசியல் ஆடியோ எக்ஸ்பீரியன்சை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 60ms வரையிலான லோ லைட்டன்சியை இது வழங்குவதால் ஆன்லைன் வீடியோ கேம் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.4 வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கனெக்டிவிட்டி வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.ஜியோமி இயர்பட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த இயர்பட்டின் செட்டிங்ஸ்களை மாற்றிக் கொள்ளவும், சவுண்ட் அனுபவத்தை விர்பாதுகேற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளவும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள இன் இயர் டிடக்ஷன் வசதியின் மூலம் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போதே நீங்கள் இயர் பட்டை காதிலிருந்து எடுக்கும் பட்சத்தில் அவை தானாகவே பாஸ் செய்து கொள்ளும் மீண்டும். நீங்கள் மீண்டும் அதனை பொருத்தி கொள்ளும் பட்சத்தில் அவை தானாகவே பாடல்களை பிளே செய்யும்படியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூசி மற்றும் ஃப்ளாஷ் ரெசிஸ்டன்ஸ்-க்காக வழங்கப்பட்டிருக்கும் IP54 ரேட்டிங் ஆனது இயர்போன்களுக்கு மட்டுமே பொருந்தும். இயர் ஃபோன்களை சார்ஜ் ஏற்ற உதவும் கேசுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரியை பொருத்தவரை இயர்பட்ஸ்-ன் கேஸுக்கு 475 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது இயர்பட்ஸ்-க்கு 54mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார் செய்தால் 42 மணி நேரம் வரை நீடிக்கும் என ரெட்மியின் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நேரம் வரை நீங்கள் இயர் பட்ஸ்-ஐ பயன்படுத்த முடியும். 10 நிமிடம் சார்ஜ் செய்தால் தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை நீங்கள் இதனை பயன்படுத்த முடியும். சார்ஜிங் கேஸ்-க்கு டைப் சி போர்ட் பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் பேட்டரியின் நிலையை அறிந்து கொள்வதற்கு எல்இடி லைட் பேனல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



Source link