Last Updated:

கொடூரமான கொலைகள் மற்றும் குற்றங்களுடன் சண்டை காட்சிகள் கொண்ட படமாக பார்வையாளர்களுக்கு நல்ல திகில் அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது

News18

சினிமா பிரியர்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப்பெரிய வரங்களாக உள்ளன. தாங்கள் விரும்பிய படத்தை, விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு பார்த்து மகிழக்கூடிய வாய்ப்பை இந்த ஓடிடி தளங்கள் தருகின்றன.

இதேபோன்று படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஓடிடி நிறுவனங்களின் வருகை பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன. ஒரு படம் வெளியாகுவதற்கு முன்பே டிஜிட்டலில் விற்பனை செய்யப்படுவதால் அதனால் கிடைக்கும் தொகை பட தயாரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் அனைத்து தரப்பினரும் லாபம் அடையும் விதமாக ஓடிடி நிறுவனங்களின் செயல்பாடு இருப்பதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். ஓடிடி தளத்தை பொறுத்த அளவில் எந்த படம் எப்போது ட்ரெண்டிங் ஆகும் என்று சொல்ல முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படங்கள் தற்போது அதிகம் பார்க்கப்படலாம்.

Also Read: Game Changer Twitter Review: எப்படி இருக்கிறது கேம் சேஞ்சர் திரைப்படம்..? கம்பேக் கொடுத்தாரா சங்கர்?

அந்த வகையில் அஜித்தின் பில்லா 2 படத்தை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலேட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கொலையுதிர் காலம் என்ற திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொடூரமான கொலைகள் மற்றும் குற்றங்களுடன் சண்டை காட்சிகள் கொண்ட படமாக பார்வையாளர்களுக்கு நல்ல திகில் அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த கொலையுதிர் காலம் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை பலகீனமான மனம் கொண்டவர்களால் பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. கொலையுதிர் காலம் படத்தில் குறிப்பிடும்படியான ஆண் நடிகர்கள் யாரும் கிடையாது.

நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருடன் நடிகை பூமிகா சாவ்லா இடம்பெற்றுள்ளார். காது கேட்கவும், பேசவும் தெரியாத ஒரு பெண்ணை சுற்றியே இந்த படத்துடைய கதை நகர்கிறது. அந்தப் பெண் அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டவர். அவரை கோடீஸ்வரர் ஒருவர் தத்தெடுக்கும் போது அவருடைய வாழ்க்கை மாறுகிறது.

இதையும் படிங்க – Pongal Release : புஷ்பா 2 -க்கு பின்னர் வசூலை அள்ளப்போகும் தென்னிந்திய படம் எது தெரியுமா?

கோடீஸ்வரரின் வீட்டை அடைந்தவுடன் அங்கு விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. கடைசியில் அவருக்கு உயிர் வாழ்வதே கடினமாக மாறுகிறது. 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரில்லர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது. இதனை இந்தி மொழியில் யூடியூபிலும் சில சேனல்கள் பதிவேற்றம் செய்துள்ளன. நல்ல திரில்லர் படம் பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.



Source link