Last Updated:

Flipkart: ஃபிளிப்கார்ட்டில் சலுகை விலையில் கிடைக்கும் ஐபோன் 15-ன் விலை மற்றும் விவரங்கள் பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

News18

நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ஸ்மார்ட் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா.? அப்படி என்றால் ஐபோன் 15 மொபைலின் 128GB வேரியன்ட்டின் அசல் வெளியீட்டு விலையான ரூ.79,900-ஐ விட தற்போது ரூ.22,901 வரை விலை குறைவாக பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மில் கிடைக்கிறது. எனவே இந்த மொபைலை இப்போது வாங்குவதை நீங்கள் பரிசீலிக்கலாம். ஆப்பிளின் இந்த டிவைஸ் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த A16 பயோனிக் சிப்செட், USB டைப்-சி சார்ஜிங் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. ஆனால் அதேசமயம் சில மாதங்களுக்கு முன் அறிமுகமான ஐபோன் 16 லேட்டஸ்ட் தலைமுறை ஐபோனாக இருப்பதால், ஐபோன் 15-ஐ விட ஸ்பீடான ப்ராசஸர் மற்றும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. எனினும் ஐபோன் 15 மொபைலை தற்போது தள்ளுபடி விலையில் பெற நினைத்தால் ஃப்ளிப்கார்ட் வழங்கும் டீலை பாருங்கள்.

தள்ளுபடி எவ்வளவு?:

ஐபோன் 16 அறிமுகம் செய்யப்பட்டதால் ஆப்பிள் ஏற்கனவே அதன் பழைய ஐபோன் மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது. ந்த வகையில் ஐபோன் 15 இப்போது ரூ.69,900-க்கு கிடைக்கிறது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் தற்போது iPhone 15 (128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்) மீது மேலும் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் ஐபோன் 15-ன் விலை ரூ.58,999-ஆக குறைந்துள்ளது. இதோடு Flipkart Axis Bank கிரெடிட் கார்டு யூஸர்களுக்கு ரூ.2,950 தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது. இதனால் மேலும் விலை குறைந்து ரூ.56,049-க்கு வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்தி உங்கள் பழைய டிவைஸின் கண்டிஷனை பொறுத்து ரூ. 55,000 வரை அதிகபட்சமாக சேமிக்கலாம்.

சலுகை விலையில் கிடைத்தாலும் ஐபோன் 15 மொபைலை வாங்காமல் தவிர்க்க ஒரு காரணமும், வாங்குவதற்கான 4 காரணங்களையும் இங்கே பார்க்கலாம். ஐபோன் 15-ஐ வாங்கலாம் என்பதற்கான 4 காரணங்கள்:

1. ஐபோன் 15 சீரிஸ் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதன் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை அனைத்து மாடல்களுக்கும் அறிமுகப்படுத்தியது. இதனுடன் இந்த மொபைல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது தெளிவான மற்றும் கிரிஸ்ப்பான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை யூஸர்களுக்கு வழங்குகிறது.

2. ஐபோன் 15 மொபைலானது 48-MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, இது வைப்ரன்ட் மற்றும் சிறந்த இமேஜ் குவாலிட்டியைவழங்குகிறது, குறிப்பாக குறைந்த ஒளி மற்றும் போர்ட்ரெய்ட் ஷாட்ஸ்களில்.

3. ஐபோன் 15 மொபைலில் பரவலாக பயன்படுத்தப்படும் USB Type-C போர்ட்டை ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ளது. இது சார்ஜிங் மற்றும் கனெக்டிவிட்டியை மிகவும் வசதியாக்குகிறது.

4. ஐபோன் 15 மொபைலில்A16 பயோனிக் சிப் உள்ளது. இந்த இன்-ஹவுஸ் ஆப்பிள் ப்ராசஸர் சக்திவாய்ந்தது மற்றும் திறமையானது. தினசரி ஸ்மார்ட்போன் டாஸ்க்குகளை சிரமமின்றி கையாளும் திறன் கொண்டது.

சுருக்கமாக சொல்வதென்றால் குறைக்கப்பட்ட விலையில் ஐபோன் 15-ஐ வாங்குவது ஒரு மோசமான டீலாக இருக்காது. ஏனெனில் இது இன்னும் ஆப்பிளின் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவங்களில் ஒன்றை வழங்குகிறது. இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் உள்ளது.

இந்த டீலை தவிர்க்க இருக்க கூடிய ஒரு காரணம்:

ஐபோன் 15 ஒரு தலைமுறை பழைய சாதனம் என்றாலும் இது ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடாகத் தெரியவில்லை. ஆனால் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சத்திற்கு ஐபோன் 15 சப்போர்ட் செய்யாது. ஏனென்றால் இதற்கான சப்போர்ட் iOS 28 அப்கிரேடுடன் கூடிய iPhone 16 Pro மாடல்களில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் லேட்டஸ்ட் iPhone அம்சங்கள் மற்றும் AI திறன்களை விரும்பும் யூஸராக இருந்தால், இந்த டீலை தவிர்க்கலாம். உண்மையில், ஐபோன் 16 இ-காமர்ஸ் தளங்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியில் கிடைக்கிறது. கூடுதலாக, உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ஐபோன் 16 -ன் விலையை மேலும் குறைக்கலாம்.



Source link