Last Updated:

அதிபர் யூன் சுக்கின் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

News18

தென் கொரியாவில் அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தது, உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே பட்ஜெட் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தென் கொரிய நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளதாக அதிபர் யூன் சுக் யோல் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் யூன் சுக்கின் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி, ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அதிபர் யூன் சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக மாறும் தென் கொரியா? இதுதான் காரணமா?

மேலும், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் செயல்பாடுகளுக்கு சிலர் துணை போவதால், தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தேசத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், அவசர நிலையை அமல்படுத்தும் முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.



Source link