Last Updated:

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்

News18

டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வரக்கூடிய சூழலில் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மீது விமர்சனங்கள் குவிய தொடங்கியுள்ளன.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் நீடித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இலங்கையிடம் படுதோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி, இந்தியாவுடனான 3 போட்டிகளிலும் வென்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 2 ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் போதிய ரன்கள் குவிக்கவில்லை.

பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஓரளவு அணியை காப்பாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ‘அணியில் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீண்ட காலமாக இந்திய பேட்ஸ்மேன்களிடம் உள்ள முக்கிய சிக்கல்கள் ஏன் இன்னும் தீர்க்கப்படவில்லை?’ என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க – 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார்? இந்த சீனியர் வீரருக்கு அதிக வாய்ப்பு…

இதேபோன்று மூத்த வீரர்கள் விராட் கோலியின் பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்.



Source link